
Cinema News
அரண்மனை 4 எடுக்க வேணாம்!…போற உசுரு மழைலயே போகட்டும்…குஷ்புவை கலாய்த்த ரசிகர்..
சென்னையில் தற்போது கனமழை பெய்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இன்று புயல் கரையை கடக்கவுள்ள நிலையில் சென்னையில் அதி கனமழை பெய்து வருவதோடு பலத்த காற்றும் வீசி வருகிறது.
இந்நிலையில், தற்போது பாஜக கட்சியில் உள்ள குஷ்பு களத்தில் இறங்கி பணி செய்ய வில்லை நெட்டிசன்கள் சிலர் டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து விளக்கமளித்த குஷ்பு ‘மக்களுக்கு உதவ நான் களத்தில் இருக்க வேண்டும் என அவசியமில்லை. என் குழு அதை செய்து வருகிறது. அவர்களுக்கு பின்னால் இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த நெட்டிசன் ஒருவர் ‘மேடம், இது போன்ற கருத்துக்களை நீங்கள் கண்டு கொள்ளவேண்டாம். நீங்கள் வீட்டிலேயே இருங்கள். ஆனால், சுந்தர் சி-யை அரண்மனை 4 எடுக்க வேண்டும் என சொல்லுங்கள். போற உசுரு மழைலயே போகட்டும்’ என பதிவிட்டுள்ளார்.
அரண்மனை , அரண்மனை 2, அரண்மனை 3 என மூன்று பாகங்களை இயக்கியுள்ளர் சுந்தர் சி. அதிலும் அரண்மனை 3 சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.