இதுக்கு லைட் ஆஃப் பண்ணிட்டு...... - அனிதா சம்பத்தை கலாய்த்த நெட்டிசன்...
ப்ரியா பவானி சங்கரை போலவே செய்தி வாசிப்பாளராக இருந்த போதே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் அனிதா சம்பத். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார்.
ஆனால், எப்போதும் அழுது வடிந்து கிண்டலுக்கும் உள்ளானார். பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில திரைப்படங்களில் செய்தியாளராகவே நடித்துள்ளார். தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவது, கணவருடன் எடுக்கப்பட்ட வீடியோக்களை வெளியிடுவது என ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும், அவரின் யுடியூப் சேனலிலும் பல வீடியோக்களை அவர் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ‘எப்போது நீங்கள் கர்ப்பமடைவீர்கள்?’ என்கிற கேள்வி கேட்பது போலவும், ஏப்ரல் மாதம் உங்களுக்கு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் பிறக்கும் என பதில் வருவது போலவும் விளையாட்டாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்து அவரும், அவரின் கணவரும் மகிழ்ச்சி அடைவது போல அந்த வீடியோ அமைந்துள்ளது.
இதைப்பார்த்த ரசிகர் ஒருவர் ‘இந்த வீடியோ போடுற டைம்ல லைட் ஆஃப் பன்னிட்டு வேலைய பார்த்திருக்கலாம். கர்ப்பம் ஆயிருப்பாங்க. ஐடியா இல்லாதவங்களா இருக்காங்க’ என கிண்டலாக பதிவிட்டார்.
இதில் ஆச்சர்யம் என்னவெனில், இதற்கு அனிதா கோபத்தை காட்டாமல் ஸமைலி போட்டு சிரித்து வைத்துள்ளார். உடனே, அந்த நபர் சும்மா விளையாட்டுக்கு போட்டேன் அக்கா தப்பா எடுத்துக்காதீங்க’ என யுடர்ன் அடித்துள்ளார்.