Connect with us
saravana store

ஐய்யய்யோ மீண்டும் மீண்டுமா?…மாநாடு தயாரிப்பாளரை கலாய்க்கும் நெட்டிசன்கள்…

simbu

Cinema News

ஐய்யய்யோ மீண்டும் மீண்டுமா?…மாநாடு தயாரிப்பாளரை கலாய்க்கும் நெட்டிசன்கள்…

சிம்பு நடித்துள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். இப்படம் சிம்பு ரசிகர்களிடம் மட்டுமில்லாமல் திரையுலகிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் ஆங்கில பட பாணியில் டைம் லூப் எனும் விஷயத்தை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

maanaadu

இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை (நவம்பர் 25ம் தேதி) தியேட்டர்களில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. சிம்பு ரசிகர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துவிட்ட நிலையில், இப்படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளி சென்றுள்ளது.

meem

நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதன் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்’ என இப்படத்தின் சுரேஷ் காமாட்சி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

meem

இதை கையில் எடுத்த நெட்டிசன்கள் ‘மாநாடு படம் வெளியாவது உறுதி… தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என ரஜினி அரசியல் கட்சி துவங்குவதாக அறிவித்தபோது அவர் கூறிய ஸ்டைலில் மீம்ஸ் போட்டு வருகின்றனர். ஒருவர் ‘ஆன்லைன்ல டிக்கெட் பண்ணவன் காசு வந்திடும். பிளாக்குன வாங்குனவன் நிலைமை’ என மீம்ஸ் போட்டுள்ளார். இன்னொருவர் டாக்டர் படத்தில் ரெடின் கிங்ஸ்லி பேசும் ‘ஐயோ மீண்டும் மீண்டுமா’ என்கிற வீடியோவை கமெண்ட்டாக போட்டுள்ளார்.

meem

இப்படி பல மீம்ஸ்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது..

பாவம் சுரேஷ் கமாட்சிக்கு என்ன நிலைமையோ!….

meem

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top