சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தில் இடம் பெற்ற காவல் ஆய்வாளரின் பெயர் ஒரு குறிப்பிட்ட சாதியை குறிப்பதாகவும், இப்படத்தின் ஒரு காட்சியில் அந்த காவல் ஆய்வாளரின் வீட்டில் வன்னியர்களின் அக்கினிக் கலச காலண்டர் வைக்கப்பட்டிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சூர்யாவிடம் விளக்கம் கேட்டு அன்புமணி ராமதாஸ் ஒரு கடிதம் எழுதினார்.
இதற்கு பதிலளித்த சூர்யா ‘எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை. இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை’ என தெரிவித்தார்.
ஆனாலும், சூர்யாவை பாமகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சூர்யாவை எட்டி உதைப்பவருக்கு ரூ.1 லட்சம் தருகிறேன் என ஒரு மாவட்ட செயலாளர் பேட்டி கொடுத்தார். மேலும் சூர்யா ரூ.5 கோடி கொடுக்க வேண்டும் என பாமக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இதையடுத்து மெல்ல மெல்ல சூர்யாவுக்கு திரைத்துறையின் ஆதரவு கிடைத்து வருகிறது. சூர்யா மீது வன்மம் காட்ட வேண்டாம் என தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அன்புமணி ராமதாஸுக்கு கடிதம் எழுதியது.
அதேபோல், சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா அன்புமணி ராமதாஸுக்கு கடிதம் எழுதினார்.மேலும், வெற்றிமாறன், வெங்கட்பிரபு, லோகேஷ் கனகராஜ் என பலரும் சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் சந்தானம் சூர்யாவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார் .ஒருவரை உயர்த்தி சொல்ல வேண்டும் என்பதற்காக மற்றொருவரை குறைத்து சொல்வது சரியல்ல. திரைப்படங்களில் யாரையும் தாழ்த்துவது முறையானது அல்ல’ என அவர் கூறியுள்ளார். மேலும் டிவிட்டரில் #WeStandwithSuriya என்கிற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆவது பற்றி எனக்கு தெரியாது. அதை நான் பார்க்கவில்லை’ என் தெரிவித்தார். இது நெட்டிசன்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, உன்னுடைய அனைத்து நகைச்சுவை காட்சிகளுமே மற்றவரை தாழ்த்தி, கேவலமாக பேசி மட்டுமே இருக்கிறது.
ஜெய்பீம் படத்தில் யாரையும் தாழ்த்தி காட்சிகள் வைக்கவில்லை. இதுபற்றி சூர்யா ஏற்கனவே விளக்கமளித்துவிட்டார். உனக்கென்ன சாதிப்பாசமா?… திரௌபதி, ருத்ரதாண்டவம் ஆகிய படங்கள் வந்த போது உனக்கு இது தெரியவில்லையா?.. என பலரும் சந்தானத்தை வறுத்தெடுத்து வருகின்றனர்.
மேலும், #சாதிவெறி_சந்தானம் என்கிற ஹேஷ்டேக்கை அவர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர். இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டிவிட்டரில் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தியுள்ளனர்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர்…
கண்ணதாசன் அர்த்தமுள்ள…
Viduthalai 2:…
தமிழ் சினிமாவில்…
ஆர்.சுந்தரராஜனை காமெடி…