அழுக்கு டிரெஸ் போட்டுட்டு உள்ள வந்தா அனுமதிக்க மாட்டீங்க.. இப்படி அவுத்துப் போட்டுட்டு உள்ளே வரலாமா?

by Saranya M |
சுமோ
X

நேற்று வெளியான கேங்கர்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இன்று மிர்ச்சி சிவா நடிப்பில் ரிலீஸான சுமோ படம் கேங்கர்ஸ் படத்திற்கு டஃப் கொடுக்கும் என்று நினைத்த ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. வழக்கம் போல் சிவாவின் படம் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இன்று சுமோ படத்தை பார்க்க சென்ற கூல் சுரேஷ் அரையும் குறையுமாக சென்றுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் எஸ்.பி.ஹோசிமின் இயக்கத்தில் சிவா நடிப்பில் உருவாகியுள்ள சுமோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பிரியா ஆனந்த், யோகி பாபு, விடிவி கணேஷ், சதிஷ், நிழல்கள் ரவி ஆகியோரும் நடித்துள்ளனர். யோஷினோரி டாஷிரொ சுமோ வீரனாக நடித்துள்ளார். மேலும், நிவாஸ் கே.பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அகில உலக சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சிவா சென்னை 28 படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து தமிழ்ப்படம், கலகலப்பு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். வணக்கம் சென்னை படத்தில் சிவாவுக்கும் பிரியா ஆனந்துக்கும் இருந்த கெமிஸ்ட்ரி சுமோ படத்திலும் வொர்க்கவுட் ஆகியுள்ளது. மேலும், 2019 ஆண்டு தொடங்கிய சுமோ படத்தின் படப்பிடிப்பு சில ஆண்டுகளுக்கு முன்னதாக முடிந்த நிலையில், சுமார் ஐந்து ஆண்டுகள் கழித்து இன்று படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இன்று சுமோ படத்தை பார்க்க சென்ற கூல் சுரேஷ் மேலே எந்தவொரு டிரெஸ்ஸும் போடாமல் அரை நிர்வாணமாக வந்துள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை பார்த்த பலரும் அழுக்காக உடை அணிந்தார்கள் என நரிக்குறவ மக்களை உள்ளே விடாத ரோகிணி தியேட்டரில் இப்படி அவுத்துப்போட்டுட்டு வந்த கூல் சுரேஷை மட்டும் அனுமதிக்கிறாங்க, எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் சுமோ வீரன் மாதிரியே இல்லையே எதுக்கு இந்த வெத்து பில்டப் என நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

Next Story