அந்த ஹாலிவுட் படத்தோடு காப்பிதான் AA22.. அட்லிய இப்படி போட்டு கலாய்க்குறாங்களே ஃபேன்ஸ்!…

by சிவா |   ( Updated:2025-04-08 21:01:30  )
atlee
X

AA22: ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக மாறியவர் அட்லி. இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் சினிமா கற்றவர். எனவே, குருவை போலவே அதிக பட்ஜெட்டுகளில் படமெடுக்கும் இயக்குனர் இவர். விஜயை வைத்து தெறி படத்தை இயக்கினார். அட்லி படமெடுக்கும் விதமும், அந்த படங்களில் தன்னை காட்டும் விதமும் விஜய்க்கு பிடித்துபோக அட்லியின் இயக்கத்தில் தொடர்ந்து மெர்சல், பிகில் ஆகிய படங்களில் நடித்தார் விஜய்.

இதனையடுத்து அட்லியை ஷாருக்கான் அழைத்து ‘நாம் இணைந்து ஒரு படம் செய்வோம்’ என சொல்ல அப்படி உருவான படம்தான் ஜவான். ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்க பக்கா ஆக்சன் பேக்கேஜோடு இப்படம் வெளியாகி 1300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. சமீபகாலமாகவே ஹிந்தி படங்கள் ஓடாத நிலையில் ஜவான் படத்தின் வெற்றி பாலிவுட்டையே பேச வைத்தது.

எனவே, அட்லியின் இயக்கத்தில் நடிக்க சல்மான்கான் கூட ஆசைப்பட்டார். ஆனால், அது நடக்காமல் போக இப்போது அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் அட்லி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. அல்லு அர்ஜூனின் பிறந்த நாளான நேற்று இப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

அதில், கலாநிதிமாறனை சந்தித்துவிட்டு அல்லு அர்ஜுனும், அட்லியும் விமானத்தில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல் நகருக்கு சென்று அங்குள்ள ஸ்டுடியோவை பார்வையிடும் காட்சிகளும், இந்த படத்தில் பணிபுரியவுள்ள ஹாலிவுட் கலைஞர்கள் இந்த படம் பற்றி பெருமையாக பேசும் காட்சிகளையும் வீடியோவாக வெளியிட்டார்கள்.

அதில், ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்துக்கு போடப்படும் முகமூடியை அடிக்கடி காட்டினார்கள். எனவே, ஸ்பைடர்மேனை உல்டா செய்துதான் அட்லி இந்த படத்தை எடுக்கப்போகிறார் என ரசிகர்கள் கமெண்ட் போட துவங்கிவிட்டனர். பொதுவாகவே, 80களில் ஹிட் அடித்த படங்களின் கதையை கொஞ்சம் மாற்றி படமெடுக்கிறார் என்கிற விமர்சனம் அட்லி மீது இருப்பதால் AA22 படத்திலும் இது தொடருமா என்பது தெரியவில்லை.

கண்டிப்பாக சில ஹாலிவுட் படங்களின் கதையை போட்டு கலந்து ஒரு புதிய படமாக அட்லி எடுப்பார் என்றே பலரும் நக்கலடித்து வருகிறார்கள். இந்த படத்தின் கதையை ஹாலிவுட் கதாசியர்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறார் அட்லி. கதையை புரிந்துகொள்ளவே கடினமாக இருக்கிறது என அந்த வீடியோவிலேயே சிலரும் சொன்னார்கள்.

அட்லி என்ன செய்ய காத்திருக்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Next Story