நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருக்கும் விஜய் அரசியலுக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும் எதையும் ஓப்பனாக பேசுவதில்லை.. பல பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பதில்லை.. செய்தியார்களை சந்திப்படில்லை. யாருக்கும் பேட்டி கொடுப்பதில்லை. இதை ஒரு பாலிசியாகவே விஜய் கடைபிடித்து வருகிறார்.
ஆனால் பேசாமல் எப்படி அரசியல் செய்ய முடியும் என அரசியல் விமர்சகர்கள் விஜயை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.. கரூர் சம்பவத்தின் போது திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கும் விஜய் எந்த பதிலும் சொல்லாமல் போனார்.. இப்போது வரை அது தொடர்கிறது..
கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்து மூன்று நாட்கள் கழித்துதான் ஒரு வீடியோவை வெளியிட்டார் விஜய்.. அதிலும் தெளிவாக பேசவில்லை.. அப்போதே பலரும் கடுமையாக விமர்சித்தனர்..
இந்நிலையில்தான் NDTV தொலைக்காட்சியைச் சேர்ந்த 4 பத்திரிகையாளர்கள் விஜயை பேட்டி எடுத்திருக்கிறார்கள்.. ஆனால் அதை கேமராவில் பதிவு செய்யாமல் வாய் வழியாகவே கேள்விகளை கேட்டு பதிலை பெற்றிருக்கிறார்கள்.. வீடியோ எடுப்பதை விஜய் விரும்பவில்லை எனத் தெரிகிறது..
அந்த பேட்டியில் விஜய் என்ன பேசினார் என்பது இன்று காலை முதலே பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. இந்நிலையில் ‘கேமராவை ஆஃப் பண்ணிட்டு பேட்டி கொடுத்த முதல் அரசியல்வாதி விஜய்தான்.. அது வீடியோவா பேச கூட அவருக்கு தைரியம் இல்லை.. இவர் அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போறார்?’ என்று பலரும் அவரை ட்ரோல் செய்து வருகிறார்கள். குறிப்பாக திமுக, அதிமுக ஆதரவாளர்கள் விஜயை நக்கலடித்து வருகிறார்கள்..
நடிகர் விஜய்…
நடிகர் விஜய்…
இன்ஸ்டாகிராம் மூலம்…
நடிகராக இருந்து…
நடிகரும் தமிழக…