கஷ்டப்பட்டு மூனு பக்கம் டைப் பண்ணியிருந்தாங்க!.. அதான் ஆதரவு!.. ட்ரோலில் சிக்கிய பார்வதி!...
Nayanthara: சில நாட்களுக்கு முன்பு தனுஷை திட்டி நடிகை நயன்தாரா திடீரென வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் 2022ம் வருடம் நடந்தது. அந்த திருமண நிகழ்வுகளை வீடியோவாக படம் பிடித்து நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு 27 கோடி விலைக்கு விற்றார் நயன்தாரா.
ஆனால், அவற்றை எடிட் செய்து பார்த்தபோது காட்சிகள் போதவில்லை. எனவே, தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில காட்சிகளை அந்த வீடியோவில் சேர்க்க நயன் - விக்கி ஜோடி முடிவெடுத்தது. ஆனால், தயாரிப்பாளர் என்கிற முறையில் தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை.
ஏனெனில், நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் படத்தை எடுக்காமல் விக்கி - நயன் ஜோடி ரொமான்ஸ் செய்து கொண்டிருந்ததாலும், படத்தின் பட்ஜெட்டை இழுத்துவிட்டதாலும் கோபத்தில் இருந்தார் தனுஷ். ஒருபக்கம், அவரிடம் விக்கி - நயன் ஜோடி முறையாக என்.ஓ.சி கேட்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது.
Nayanthara Beyond the Fairly Tale என்கிற பெயரில் ஓடிடியில் அந்த வீடியோ வெளியானது. அதில், தனது அனுமதி இல்லாமல் நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை நயன்தாரா சேர்த்துவிட்டதாக 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் தனுஷ். இந்த கோபத்தில்தான் நயன்தாரா அவரை திட்டித்தீர்த்து அறிக்கை வெளியிட்டார்.
தனுஷை ஒரு சைக்கோ போல சித்தரித்து திட்டி தீர்த்தார் நயன். இன்ஸ்டாகிராமில் அந்த பதிவை அவர் போட்டதும் மலையாள நடிகை பார்வதி உட்பல பலரும் அதற்கு லைக் போட்டு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், நயன்தாரா மீதுதான் தவறு. இது புரியாமல் பார்வதி உள்ளிட்ட நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்தது பற்றி ஊடகம் ஒன்றில் பதில் சொன்ன பார்வதி ‘நயன்தாரா தானாக முன்னேறி சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக மாறியிருக்கிறார். 3 பக்கங்கள் அவர் எழுதி இருக்கிறார் எனில் அவர் பக்கம் நியாயம் இருக்கும் என நம்பியே அவருக்கு ஆதரவு தெரிவித்தேன்’ என சொல்லி இருக்கிறார்.
இதைத்தொடர்ந்து மீம்ஸ்களை உருவாக்கி பார்வதியை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.