நடிச்சது போதும்!.. ரிட்டயர்ட் ஆயிடு தலைவா!.. ஜெயிலரை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!..

பேருந்து நடத்துனராக இருந்து அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ரஜினிகாந்த். மெல்ல ஹீரோவாக மாறி சூப்பர்ஸ்டாராகவும் மாறினார். 30 வருடங்களாக இவரின் மார்க்கெட்டை யாராலும் அசைக்க முடியவில்லை. இவருக்கு உலகமெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஜப்பானில் கூட இவருக்கு ரசிகர்கள் உண்டு.
தற்போது ரஜினிக்கு 72 வயது ஆகிறது. வயது முதிர்வு அவரின் முகத்தில் நன்றாகவே தெரிகிறது. சந்திரமுகி படத்திற்கு பின் ஒரு பெரிய ஹிட் படத்தை ரஜினியால் கொடுக்க முடியவில்லை. அதாவது, கடந்த 18 வருடங்களாக அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இதில், பேட்டை மட்டும் கொஞ்சம் தப்பித்தது.
பாபா, லிங்கா, குசேலன், தர்பார், அண்ணாத்த என போன்ற படங்கள் நல்ல வசூலை பெறவில்லை. எனவே, எப்படியாவது ஒரு பெரிய ஹிட் படத்தை கொடுத்தே ஆகவேண்டும் என ரஜினி நினைக்கிறார். நெல்சனுடன் கை கோர்த்து ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படமாவது தனக்கு ஹிட் படமாக அமைய வேண்டும் என ரஜினி எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற காவலா பாடல் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது. இதில் கவர்ச்சி உடையில் தமன்னா ஆட ரஜினி சில பர்பாமான்ஸ்களை செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. வழக்கமாக கண்ணாடியை வேகமாக எடுத்து ஸ்டைலாக சுழற்றி போடும் ரஜினி ஏனோ மெதுவாக செய்வதால் அதை ரசிக்க கூட முடியவில்லை.
இதைத்தொடர்ந்து இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ரஜினியை ட்ரோல் செய்ய துவங்கிவிட்டனர். ரஜினி நடித்தது போதும்.. ரிட்டயர்ட் ஆவது நல்லது என்றெல்லாம் பதிவிட்டு வருகின்றனர்.