டேய்!..தலைவர என்னடா பண்ணி வச்சிருக்கீங்க!.. ட்ரோலுக்கு உள்ளாகும் லால்சலாம் ஃபர்ஸ்ட் லுக்...
ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் திரைப்படம் லால் சலாம். இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யாவின் அப்பாவும், நடிகருமான ரஜினி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த படத்தில் நடிப்பதற்காக ரஜினி நேற்று மும்பை கிளம்பி சென்றார்.
இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ளது. மொய்தீன் பாய் ஆட்டம் என கேப்ஷன் கொடுக்கப்பட்டு பின்னணியில் கலவரம் வெடிக்க ரஜினி இஸ்லாமியர் வேடத்தில் ஸ்டைலாக நிற்பது போல அந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த போஸ்டர் நெட்டிசன்களின் ட்ரோலுக்கு உள்ளாகியுள்ளது. ரஜினியை வச்சி இவ்வளவு மொக்கையாகவே ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை உருவாக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
‘தென்னிந்திய சினிமாவோட மிகப்பெரிய சூப்பர்ஸ்டாரை வெச்சு ஒரு படம் பண்றப்போ, இவ்ளோ கேவலமான ஒரு first look போஸ்டர் ரிலீஸ் பண்ணமுடியுமா? 'முடியும்' அப்படின்னு confidentஆ பண்ணியிருக்காங்க ஏற்கனவே 2 படம் எடுத்த இந்த டைரக்டர். கிண்டி ரயில்வே ஸ்டேஷன் வாசல்ல ஜெராக்ஸ் கடை வெச்சிருக்குற அண்ணன்கிட்ட கொடுத்தா கூட, இன்னும் பெட்டரா #ரஜினி முகத்தை photo shop பண்ணி கொடுத்திருப்பார்’ என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
ஒருவர் ‘டேய் என்னடா பண்னி வச்சிருக்கீங்க ரஜினிய’ என பதிவிட்டுள்ளார்.
நம்ம ட்விட்டர்ல கூட அருமையா போஸ்டர் டிசைன் செய்யற நிறைய பேர் எனக்கு தெரியும்.. எங்க இருந்து இப்படி கேவலமா டிசைன் செய்யறவங்கல புடிக்கராங்கனுதான் தெரிய மாட்டேங்குது’ என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
இப்படி பலரும் இந்த போஸ்டரை ட்ரோல் செய்து வருகின்றனர். அதேநேரம், இது ரஜினியை பிடிக்காதவர்கள் செய்யும் வேலை. ரசிகர்களுக்கு இது கொண்டாட்டம்தான் எனவும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.