டிரெய்லர் பார்த்தாலே கொட்டாவி வருது!.. படம் எப்படி இருக்குமோ!. இப்பவே ஆரம்பிச்சிட்டாங்களே!….

by சிவா |   ( Updated:2025-04-19 00:26:00  )
retro
X

Retro Trailer: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர், ஜெயராம், சிங்கம் புலி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு முன் சூர்யா நடித்து வெளிவந்த கங்குவா படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

அதுவும் முதல் காட்சி வெளியான உடனேயே சூர்யா மீது வன்மத்தில் இருந்த விஜய் ரசிகர்கள் உட்பல பலரும் படத்தின் மீது வன்மத்தை கக்கினார்கள். படம் நன்றாகவே இல்லை. படு மொக்கை.. ஒரே இரைச்சல் என நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை போட்டு படத்தை காலி செய்தார்கள். அவர்கள் சொல்லுமளவுக்கு எல்லாம் படம் இல்லை. படம் நன்றாகத்தான் இருந்தது என பார்த்தவர்கள் சொன்னார்கள்.

ஆனால், அதிகப்படியான நெகட்டிவ் விமர்சனங்கள் படத்தின் வசூலை கடுமையாக பாதித்தது. கங்குவா படத்தை இரண்டு பாகமாக எடுக்க திட்டமிட்டிருந்தனர். ஹாலிவுட் ஸ்டைலில் மேக்கிங் இருந்தது. சூர்யாவும் மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருந்தார். ஆனாலும், படம் ஓடவில்லை. படம் 2 ஆயிரம் கோடி வரை வசூல் செய்யும் என பில்டப் செய்த இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

எனவே, கங்குவா 2 படத்தை எடுக்கும் முயற்சியையும் படக்குழு கைவிட்டது. இப்படத்தின் இயக்குனர் சிவா, சூர்யா, தயாரிப்பாளர் என எல்லோரும் அப்செட் ஆனார்கள். ஆனாலும் சூர்யா அதிலிருந்து மீண்டும் ரெட்ரோ படத்தில் நடிக்க துவங்கினார். மேலும், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் இப்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்தான், ரெட்ரோ படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்த டிரெய்லரில் நிறைய ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இந்த டிரெய்லரை கட் செய்திருந்தார். ஏனெனில், அடிப்படையில் அவர் ஒரு எடிட்டர். கார்த்திக் சுப்பாராஜ் கேட்டதால் இதை செய்து கொடுத்திருக்கிறார்.

இந்த டிரெய்லரின் நீளம் 2 நிமிடம் 43 வினாடிகள் வருகிறது. பொதுவாக டிரெய்லர் வீடியோ இவ்வளவு நீளம் இருக்காது. பெரும்பாலும் 2 நிமிடத்திற்குள் முடித்துவிடுவார்கள். ஆனால், ரெட்ரோ டிரெய்லர் வீடியோ கொஞ்சம் நீளமாகவே இருக்கிறது என பலரும் பதிவிட்டு வருகிறார்கள். சிலரோ ‘டிரெய்லர பார்த்தலே கொட்டாவி வருது. படத்தை என்ன பண்ணி வச்சிருக்காங்களோ தெரியல’ என நக்கலடிக்க துவங்கிவிட்டனர். ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி வெளியாகவுள்ளது.

Next Story