புதுசா எதுவுமே சிக்கலையே!.. மீண்டும் முதல்ல இருந்தா?.. விட்ரு இர்ஃபான்.. கதறும் ஃபேன்ஸ்!..

யூடியூபர் இர்ஃபான் என்று அடையாளப்படுத்துவதை விட சர்ச்சை நாயகன் இர்ஃபான் என்றும் மன்னிப்பு கேட்பதில் கின்னஸ் சாதனை படைத்திடுவார் இர்ஃபான் என்றும் ரசிகர்கள் கேலி செய்யத் தொடங்கி விட்டனர்.
யப்போ என்ன விட்டுடா என நெட்டிசன்கள் கதறும் அளவுக்கு மீண்டும் ஒரு வீடியோவை இர்ஃபான் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு யூட்யூபில் சம்பாதித்து வரும் இர்ஃபான் இந்த வாரம் புதிதாக எந்த ஒரு கண்டெண்டும் கிடைக்கவில்லை என்பதற்காக மீண்டும் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிடலாம் என திட்டமிட்டு தற்போது புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார் என கலாய்த்து வருகின்றனர்.
ரம்ஜான் பண்டிகை அதுவுமாக தனது காரில் சில துணிமணிகளை எடுத்துக்கொண்டு இல்லாத பட்டவர்களுக்கு காரில் அமர்ந்தபடியே தனது மனைவியுடன் சேர்ந்து இர்ஃபான் தானம் என்கிற பெயரில் செய்த அட்ராசிட்டி மற்றும் இல்லாதப்பட்ட மக்களை அசிங்கப்படுத்தும் விதமாக ஏன் புடுங்கறீங்க.. என் மனைவியை கையை விடுங்க என இர்ஃபான் பேசியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

அந்த வீடியோவுக்கு இர்ஃபான் இத்தனை நாளாக மன்னிப்பு கூட கேட்க முடியாத மனநிலையில் இருந்து வந்த நிலையில், பொதுமக்களே அதைப் பற்றி மறந்து விட்ட நிலையில், மீண்டும் அதே டாப்பிக்கை எடுத்துப் பேசி அந்த சம்பவத்துக்கு மன்னிப்புக் கேட்பதாக பேசி உள்ளார். இப்போ உன்னிடம் யாரும் மன்னிப்பு கேட்கவில்லையே என்றும் புதுசா கன்டென்ட் கிடைக்கவில்லை என்றதும் மீண்டும் அந்த பழைய டிராமாவை ஆரம்பிச்சாச்சா போதும் முடியல என நெட்டிசன்கள் இர்ஃபான் வீடியோவுக்கு கீழே கமெண்ட் போட்டு வருகின்றனர்.