ஸ்டைலீஸ் விஜய்.. ஃபேமிலி செண்டிமெண்ட்!.. எப்படி இருக்கு வாரிசு?.. டிவிட்டர் விமர்சனம்....
விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக எதிர்பார்த்த ‘வாரிசு’ படம் இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் ரசிகர்களுக்காக சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது. வழக்கம் போல் விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் இப்படத்தை பார்த்தனர். மேலும், சினிமா ரசிகர்கள் பலரும் வாரிசு படத்தை பார்த்தனர். படம் பார்த்த பின் இப்படம் பற்றிய கருத்துக்களை தங்களின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.
அதிகம் பேர் சொல்லும் கருத்து வாரிசு ஒரு ஃபேமிலி எண்டர்டெய்னர் என்பதுதான். குடும்ப செண்டிமெண்ட் கலந்த, அதேநேரம் விஜய் ரசிகர்கள் எதிர்பாக்கும் ஆக்ஷன், மாஸ் காட்சிகளும் படத்தில் இருப்பதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
குடும்பத்தோடு பார்க்கும் படமாக வாரிசு இருப்பதாகவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடிக்கும்படி திரைக்கதை மற்றும் காட்சிகளை படத்தின் இயக்குனர் வம்சி வைத்திருப்பதாகவும் பலரும் தெரிவித்து வருகின்றனர்.கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கு ‘வாரிசு’ படம் பொங்கல் விருந்துதான் எனவும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
யோகிபாபுவுடன் விஜய் அடிக்கும் லூட்டிகள் சிரிக்க வைப்பதாகவும், அதேபோல், அவரின் அம்மா ஜெயசுதாவுடன் விஜய்க்கு இருக்கும் செண்டிமெண்ட் காட்சிகள் நன்றாக இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.
அதேபோல், பாடல்களுக்கு தமன் கொடுத்துள்ள இசையும், பின்னணி இசையையும் பலரும் பாராட்டி வருகின்றனர். தமன் சிறந்த இசையை கொடுத்துள்ளார். அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கிறது. பாடல்களை எடுத்தவிதமும் ரசிக்க வைக்கிறது என கூறி வருகின்றனர்.
விஜய் ஸ்டைலீஸாக இருப்பதாகவும், இப்படம் விஜய் ரசிகர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களுக்கும் இப்படம் கண்டிப்பாக பிடிக்கும் எனவும், இயக்குனர் வம்சி இதுபோல் இன்னும் நிறைய குடும்ப படங்களை கொடுக்க வேண்டும் என நடிகை நிஷா கணேஷ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஒரு விஜய் ரசிகர் எதிர்பார்க்கும் விஜய்க்கான எமோஷனல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் எல்லாவற்றையும் கலந்து இப்படத்தை வம்சி கொடுத்துள்ளார். நடன அசைவுகளில் வழக்கம்போல் விஜய் அசத்தியுள்ளார். விஜயுடன் ராஷ்மிகா மந்தனாவின் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது. படத்தின் இரண்டாம் பாதி தியேட்டரில் ரசிக்க வைக்கும்படி பல காட்சிகள் இருக்கிறது என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
மொத்தத்தில் ரசிகர்கள் கொண்டாடும் படமாகவும், குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாகவும் வாரிசு படம் இருக்கிறது எனவும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
ஆனாலும் படத்திற்கு 3.5/5 என்கிற மதிப்பெண்ணையே இப்படத்திற்கு பலரும் கொடுத்துள்ளனர். ஒருபக்கம், படம் நன்றாக இல்லை. தெலுங்கு படம் போல் இருக்கிறது. விஜய் ஓவர் ஆக்டிங் செய்துள்ளார். காமெடி காட்சிகள் ஒர்க் அவுட் ஆகவில்லை. ஒரு முறை பார்க்கலாம் எனவும் பலரும் கூறி வருகிறார்கள்.
வாரிசு எல்லா ரசிகர்களையும் கவர்ந்துள்ளதா என்பது ஒரிரு நாட்களில் தெரிந்துவிடும்.
இதையும் படிங்க: இயக்குனர் சொன்ன அந்த ஒரே வார்த்தை… மொத்தமாக படத்தில் இருந்தே விலகிய சிவாஜி கணேசன்… ஏன் இப்படி??