Connect with us

Cinema News

வலிமை படத்துல இவங்க இருக்காங்களா ? கசிந்த தகவல், அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தமிழ் திரையுலகின் டாப் நடிகரான அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தில், ஜான்வி கபூர் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வலிமை திரைப்படம் வருகின்ற ஜனவரி 13 ஆம் தேதி உலகமெங்கும் ரீலிஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக அஜித் நடித்துள்ளார், கதாநாயகியாக காலா படத்தில் நடித்த ஹூமா குரேஷி, வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளனர்.

கொரானா பரவல், ஊரடங்கு என இத்திரைப்படம் ரிலீஸ் ஆகும், தள்ளிப்போகும், ஒடிடி தளத்தில் வெளியிடப்படும் என பல வதந்திகள் உலா வருகின்றனர். இருந்தாலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வலிமை திரைப்படம் ரிலீஸ் செய்யப்படும் என அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் மட்டும் வலிமை திரைப்படத்தை ஜனவரி 12-ந் தேதியே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஆன்லைன் டிக்கெட் பதிவு தளத்தில் வலிமை படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அதில் தயாரிப்பாளர் போனி கபூரின் மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூரின் பெயரும் இடம்பெற்றுள்ளதால், இது நமக்கு தெரியாம போச்சே என ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும், அவர் அத்திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் எனவும் தகவல் கசிந்துள்ளது.

google news
Continue Reading

More in Cinema News

To Top