ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் தளபதி விஜய்க்கும் புது ஒப்பந்தம்.?! வெளியான சீக்ரெட் தகவல்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய்யின் சம்பளம் ரூ.100 கோடிக்கும் மேல் என கூறப்படுகிறது. தற்போது, இவருக்கு வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே வெளியாகிறது. தற்போது, தனது அடுத்த படமான 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார்.
தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்துள்ள இவருக்கு சில இடங்களில் மண்டபம் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, சாலிகிராமத்தில் உள்ள ஷோபா திருமண மண்டபம் அடுத்த போரூரில் தனது மனைவி பெயரில் சங்கீதா திருமண மண்டபம் இருக்கிறதாம்.
இது மட்டுமின்றி புதுக்கோட்டையிலும் ஒரு திருமண மண்டபம் வைத்துள்ளாராம். இப்படி, சில மாவட்டங்களில் மண்டபம் வைத்துள்ள விஜய், தனது தாயார் பெயரில் சென்னையில் இயங்கிவரும் மண்டபத்தில் இப்போ திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் ஏதும் வருவது இல்லையாம்.
இதையும் படிங்களேன் - எதிர்பார்ப்பை எகிற வைத்த அதிபயங்கர அப்டேட்… அஜித்திற்கு நிகரான நடிகரை தேடி பிடித்த படக்குழு.!
இந்நிலையில், சென்னையில் உள்ள இந்த திருமண மண்டபம் தயாரிப்பாளர் லலித் என்பவருக்கு குறுகிய வருட ஒப்பந்தத்தில் வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது, திருமண மண்டபத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வாடகைக்கு ஒப்பந்தம் செய்யப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இதைவைத்து பார்க்கும்பொழுது, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஜய் பெரியதாக ஏதும் செய்யப் போகிறா என்று தெரியவில்லை, இந்த தகவலும் எந்தஅளவிற்கு உண்மை என்று தெரியவில்லை சில நம்ப தக்க சினிமா வட்டாரங்களில் இது குறித்து பேசப்பட்டு வருகிறது. விஜய் அம்மா சோபா பெயரில் இயங்கி வரும் மண்டபம் ஷாப்பிங் மாலாக உருவெடுக்க தான் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.