கலைக்கட்டிய கோலிவுட்டின் புது காதல் ஜோடிகள்.. அடடா! என்னங்க கல்யாண சீசனா இது?
கோலிவுட்டில் தற்போது கல்யாண சீசன் போல முன்னணி பிரபலங்கள் எல்லாம் தங்கள் காதலை தொடர்ச்சியாக அறிவித்து வருகிறார்கள். இதில் டாப் ஹிட் அடித்த சில காதல் ஜோடிகள் உங்களுக்காக.
கௌதம் - மஞ்சிமா மோகன்:
மஞ்சிமாவுடன் கௌதம் கார்த்திக் காதலில் இருப்பதாக பல மாதங்களாக வதந்திகள் இறக்கை கட்டி பறந்து வந்தது. இதற்கு இருதரப்பும் மறுப்பு தெரிவிக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், சில நாட்கள் முன்னர் இருவரும் அதிகாரப்பூர்வமான தங்கள் இன்ஸ்டா பக்கம் மூலம் காதலில் இருப்பதை உறுதி செய்திருக்கிறார்கள். அதில் அவர்கள் லவ் சொல்லும் படங்கள் தான் ஹைலைட்.
சித்தார்த் - அதிதி ராவ்:
இயக்குனர் மணிரத்னத்தின் ஆஷ்தான நடிகர் சித்தார்த், அவரிடன் சக நடிகையான அதிதி ராவை காதலிப்பதாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. இதற்கு காரணமாக அதிதியின் பிறந்தநாளுக்கு இதய இளவரசிக்கு வாழ்த்துக்கள் என அவர் போட்ட போஸ்ட் தான்.
ஹன்சிகா - சோகேல்:
தமிழ் சினிமாவின் குட்டி குஷ்பூ எனச் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை ஹன்சிகா. இவருக்கு கல்யாணம் என சில நாட்களாக விஷயங்கள் கசிந்து வந்தது. இந்நிலையில், கடந்த வாரம் தனது காதலர் சோகேல் உடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அதில் முட்டிப்போட்டு அவர் ப்ரோபோஸ் செய்யும் படங்கள் தான் செம ரீச் கொடுத்திருக்கிறது.