சிவகார்த்திகேயனுக்கு கொடுக்கிறீங்க... நாங்க என்ன தக்காளி தொக்கா...

by Akhilan |
சிவகார்த்திகேயனுக்கு கொடுக்கிறீங்க... நாங்க என்ன தக்காளி தொக்கா...
X

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஒரு பெத்த தொகையை சினிமாவில் சம்பளமாக கொடுக்கும் போது இந்த நடிகருக்கும் கொடுக்க வேண்டும் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கள் கிளம்பி இருக்கிறது.

சினிமா வட்டாரத்தில் பிரபலங்களின் சம்பளம் என்பது அவரவரின் படங்களின் வெற்றியை வைத்தே நிர்ணயிக்கப்படும். லட்சத்தில் சம்பளம் வாங்கும் நட்சத்திரங்கள் கூட ஒரு படம் நல்ல வெற்றியை பெற்று விட்டால் உடனே கோடியில் சம்பளம் கேட்கும் நிலைமை மாறி விடுகிறது.

100 கோடியை தாண்டி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சம்பளம் தற்போது 75 கோடிக்குள் வந்துவிட்டது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தின் தோல்வியே இந்த சம்பள குறைப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அடி மட்டத்துக்குப்போன சிம்பு பட வசூல்!…சக்சஸ் மீட் எல்லாம் நடத்துனீங்களே புரோ!

இந்நிலையில், நடிகர் சிலம்பரசன் நடிப்பில் சமீபத்தில் வெந்து தணிந்தது காடு படம் திரைக்கு வந்தது. இப்படம் நல்ல வசூலை பெற்று தந்தது. இதனால் சிம்பு தற்போது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாராம். அதாவது அவரிடம் சமீபத்தில் கால்ஷூட் கேட்க சென்ற தயாரிப்பாளரிடம் ரூ.35 கோடியை சம்பளமாக கேட்டு இருக்கிறார்.

இது தான் தற்போதைய கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. ஆனால், சிவகார்த்திகேயனுக்கே 35 கோடி ரூபாயிற்கு மேல் கொடுக்கப்பட்டு வரும் போது, பல வருடமாக சினிமாவில் இருக்கும் சிம்பு இவ்வளவு கேட்பதில் தவறில்லை என்றே கூறப்படுகிறது.

மேலும், வெந்து தணிந்தது காடு படத்தை ஐசரி கணேஷ் தான் தயாரித்து இருந்தார். அவருக்கு கிடைத்த வசூலில் சிம்புவிற்கு கார், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு பைக் என பரிசளித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story