இப்படி ஓர் குடும்ப பின்னணியா.. எதிர்பார்க்கலையே.. பிரியங்காவின் கணவர் வசி குறித்த புது தகவல்!

விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பிரியங்கா தேஷ்பாண்டே, அங்கு பணிபுரிந்த தயாரிப்பாளர் பிரவீனை காதலித்து திருமணம் செய்தார். ஆனால், பின்னர் பிரவீனுடன் விவாகரத்து செய்தார். அதன்பின், பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்தார்.
சில தினங்களுக்கு முன் பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கும் வசி என்பவருக்கும் திருமணம் நடந்தது. பிரியங்காவின் கணவர் வசி குறித்து சமூக ஊடகங்களில் பலரும் தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர். வசி சீரியல் தயாரிப்பாளர் மற்றும் டி.ஜே. ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி நடத்தி வருகிறார்.
ஆனால், உண்மையில் வசி ஒரு ஈழத்தமிழர், அவரின் குடும்பம் இலங்கை திரிகோணமலையில் வசித்திருக்கிறது. மேலும், வசி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த மறைந்த இரா.சம்பந்தனின் தங்கையின் மகனாவார். இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் இரா.சம்பந்தன். இவரின் இலங்கைத் தமிழரசுக் கட்சி இலங்கை வாழ் தமிழர்களிடையே பெருத்த ஆதரவைப் பெற்று திகழ்ந்த கட்சி.

வசியின் குடும்ப நண்பர் ஊடகங்களிடம் இந்த தகவல்களை பகிர்ந்துள்ளார். மேலும், வசி இலங்கையில் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியும் நடத்தி வருகிறார். அந்தவகையில், தமிழ்நாட்டிலிருந்து சின்னத்திரை நட்சத்திரங்கள் இலங்கையில் கலைநிகழ்ச்சிகளுக்காகச் சென்று வருவது வழக்கம். அப்படிச் சென்று வந்த தருணங்களில் பிரியங்காவுக்கு வசி நண்பராக அறிமுகமாகி, அந்த நட்பே காதலாகி திருமணத்தில் முடிந்திருக்கிறது.
இதற்கிடையே, பிரியங்கா தேஷ்பாண்டேவின் இரண்டாவது கணவர் வசி, நரைத்த முடியுடன் வயதானவர் போல தோற்றமளிக்கிறார் என்றதால், அவரின் வயது என்னவென்பது பேச்சாக உள்ளது. டிஜே வசிக்கு தற்போது 42 வயது. பிரியங்காவுக்கு 32 வயது, அதாவது, 10 வயது இளையவர் பிரியங்கா. 10 வயது மூத்தவரை பிரியங்கா திருமணம் செய்துகொண்ட செய்தி இணையத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.