தாறுமாறான பட்ஜெட்டில் புதிய படம்...தாங்குவாரா விஜய் சேதுபதி?.....
நடிகர் விஜய் சேதுபதி இந்திய திரைப்பட நடிகர் ஆவார். 2004 ம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். 2010 ல் சீனு இராமசாமி தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார்.
நடிகர் விஜய் சேதுபதி இதுவரைக்கும் நடித்துள்ள படத்தின் எண்ணிக்கை 61 ஆகும். தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவர இருக்கும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படம் தான் விஜய்சேதுபதி இதுவரை நடித்துள்ள படத்தில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் ஆகும் .மேலும் இந்த படம் தான் அவர் நடித்த படத்தில் அதிகமாக விற்பனையான படமும் கூட .இந்த படத்தின் பட்ஜெட் 33 கோடி ரூபாய் ஆகும்.
இரண்டாம் இடத்தில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளியான படம் ஜுங்கா ஆகும்.இந்த படத்தின் பட்ஜெட் 24 கோடியாம்.
மூன்றாம் இடத்தில் டி.ராஜேந்தர் உடன் நடிகர் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளியான படம் கவன் ஆகும்.இந்த படத்தின் பட்ஜெட் 17 கோடியாம்