Cinema News
தியேட்டரில் 100 சதவீதம் அனுமதி… ரிலீஸுக்கு தயாராகும் புதிய படங்கள்…
கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கள் கடந்த வருடம் மார்ச் மாதம் முதலே திரையரங்குகள் மூடப்பட்டது. அதன்பின் கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் இந்த வருடம் அதாவது 2021ம் ஆண்டு மார்ச் வரை தியேட்டர்கள் திறக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் தியேட்டர்கள் மூடப்பட்டது.
எனவே, தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வந்தனர். அதில் சிலர் தங்களின் படத்தை ஓடிடியில் வெளியிட்டனர். பல திரைப்படங்கள் முடங்கிப்போனது. 2 மாதங்களுக்கு முன்பு தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதில், டாக்டர் திரைப்படமும், அரண்மனை 3 படமும் வெளியாகி நல்ல வசூலை பெற்றது. இந்த படங்கள் மீண்டும் ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வந்துள்ளது.
தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த மற்றும் விஷால் – ஆர்யா இணைந்து நடித்த எனிமி ஆகிய 2 படங்கள் வெளியாகிறது. தற்போது நவம்பர் 1ம் தேதி முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அரசு அனுமதி அளித்துவிட்டது. எனவே, திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். மேலும், தீபாவளிக்கு பின் 4 புதிய படங்கள் வெளியாகவுள்ளது.
அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள உருவாகியுள்ள பார்டர், சந்தானம் நடித்துள்ள சபாபதி, சி.வி.குமார் இயக்கத்தில் ஜங்கோ மற்றும் சாந்தனு நடித்துள்ள முருங்கைக்காய் சிப்ஸ் ஆகிய படங்கள் நவம்பர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. சிம்புவின் மாநாடு திரைப்படம் நவம்பர் 25ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.
மேலே குறிப்பிட்ட படங்கள் மட்டுமின்றி வேறு சில திரைப்படங்களும் நவம்பர் மாதம் வெளியாக திட்டமிடப்பட்டிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.