மிருணாள் தாக்கூரை விட்டுட்டு ராசியில்லாத நடிகையை ஓகே செய்யும் சிவகார்த்திகேயன் டீம்!... தப்புல!

by Akhilan |
மிருணாள் தாக்கூரை விட்டுட்டு ராசியில்லாத நடிகையை ஓகே செய்யும் சிவகார்த்திகேயன் டீம்!... தப்புல!
X

Sivakarthikeyan: பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் வேலைகள் பரபரப்பாக தொடங்கப்பட்டு இருக்கிறது. இப்படத்தின் நாயகி வேட்டையில் படக்குழு ஒரு விஷயத்தினை மிஸ் செய்து இருப்பதால் ரசிகர்களே பீலிங்காகி விட்டனராம்.

அயலான் படமே பல வருடம் கிடப்பில் போடப்பட்டு பெரிய கடன்சுமையுடன் ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தர்பார் படத்தினை தொடர்ந்து பெரிய கேப்புக்கு பின்னர் கோலிவுட் பக்கம் வந்து இருக்கிறார் முருகதாஸ். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இதையும் படிங்க… அடேய் எனக்கு படம் தான்டா முக்கியம்!..கோட் படத்தால் தன்னுடைய ஆசையை துறந்த வெங்கட் பிரபு!…

அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. முதலில் இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. சீதா ராமம், ஹாய் நன்னா என மிருணாள் நடித்த எல்லா படமுமே பாசிட்டிவ் விமர்சனம் மட்டுமல்லாமல் பெரிய வசூலையும் குவித்து இருக்கிறது. ஆனால் தற்போது அவர் இந்த படத்தில் இணையவில்லையாம்.

அவருக்கு பதிலாக நடிகை பூஜா ஹெக்டே இந்த படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறார். இதற்கு முன்னர் பூஜா, விஜயின் பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இருந்தார். ஆனால் அந்த படம் பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. அதற்கு முன்னர் ஜீவாவுடன் இணைந்த முகமூடி படமும் அட்டர் ப்ளாப் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க… வாய்ப்புக்காக அஜித்திடம் போராடிய இயக்குனர்!… சொல் பேச்சு கேட்கலைல வாய்ப்பே கிடையாது!…

நல்ல ராசியான மிருணாளை விட்டு பூஜாவை புக் செய்து இப்போதே படத்தின் ரிசல்ட்டை சொல்றீங்களா என ரசிகர்கள் படக்குழுவை கலாய்த்து வருகின்றனர். இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனின் அயலான் படம் வேறு பொங்கல் தினத்தில் ரிலீஸாக சிக்கல் எழுந்து இருக்கும் நிலையில் இந்த தகவலும் ரசிகர்களை அப்செட் ஆக்கி இருக்கிறதாம்.

Next Story