சூப்பர்ஸ்டார் பிரச்னை முடிஞ்சுது… லேடி சூப்பர்ஸ்டார் சண்டை ஸ்டார்ட்… நயனுக்கே டஃப் கொடுக்கும் நடிகை…
Trisha: தமிழ் சினிமாவில் போட்டி பிரபலங்களுக்கு இடையே பிரச்னை வருவது வாடிக்கையான விஷயமாகி விட்டது. அந்த வகையில் கோலிவுட்டில் தற்போது லேடி சூப்பர்ஸ்டார் பிரச்னை விஸ்வருபம் எடுத்து இருக்கிறது.
வாரிசு படத்தின் விழாவில் நடிகர் சரத்குமார் விஜயை பார்த்து அடுத்த சூப்பர் ஸ்டார் எனப் பாராட்டி பேச அது சர்ச்சையானது. இது தொடர்ந்து பிரபலங்கள் பலரும் விஜயிற்கு ஆதரவாகவும் பல ரஜினிகாந்த் ஆதரவாகவும் கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து கொண்டே வந்தனர். இதை எடுத்து ஜெயிலர் ஆடியோ ரிலீஸ் விழாவில் ரஜினிகாந்த் சொன்ன காக்கா கழுகு கதை மிகப்பெரிய அளவில் வைரலானது.
இதையும் படிங்க: விடாமுயற்சி படப்பிடிப்பில் கவிழ்ந்த ஜீப்!.. அஜித்துக்கு என்னாச்சி?!.. வெளியான அதிர்ச்சி வீடியோ!..
விஜயின் பங்குக்கு அவரும் தன்னுடைய லியோ வெற்றி விழாவில் சிலவற்றை பேசி பிரச்சினையை சமூகமாக்கும் படி பேசினாலும் சூப்பர்ஸ்டார் இடத்துக்கு ஆசைப்படுவது தப்பில்லையே எனவும் பேசி இருப்பார். இந்தப் பிரச்சினை ஒரு மாதிரி முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து தற்போது எறிய தொடங்கி இருக்கிறது. தனிநாயகியாக நடிகைகள் நடித்தாலும் படம் பெரிய அளவில் ஹிட் கொடுக்கும் என்ற எண்ணத்தை உருவாக்கியது நயன்தாரா தான்.
இவர் நடிப்பில் நிறைய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனால் கோலிவுட் வட்டாரத்தில் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் அழைக்க தொடங்கினர். அவருடன் போட்டியில் இருந்த திரிஷா தன்னுடைய மார்க்கெட்டில் பெரிய சரிவை சந்தித்தார். அந்த நேரத்தில், மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் கை கொடுத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். குந்தவை கேரக்டரில் நடித்த திரிஷாவிற்கு தற்போது மார்க்கெட் மீண்டும் உயர்ந்து இருக்கிறது.
இதையும் படிங்க: கண்ணதாசனுக்கு வந்த காதல்!.. பாடல் வரிகளில் இறக்கிய கவிஞர்!.. அட அந்தப் பாடலா?..
இதனால் கடுப்பான நயன்தாரா தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் முதலில் தன்னுடைய சம்பள விஷயத்தை கறாராக பேசுவதாக கூறப்படுகிறது. தனக்கும் 12 கோடி சம்பளம் வேண்டும் எனவும் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கள் தொடங்கி இருக்கிறது. பட்டத்தை தக்க வைத்துக் கொள்வாரா இல்லை திரிஷாவிடம் தொலைப்பாரா என ரசிகர்களும் ஆவலாக எதிர்பார்த்து இருக்கின்றனர்.