அடங்கிய சிம்பு...ஆரம்பித்த விஷால்...இதுக்கெல்லாம் உதயநிதிதான் காரணமா?

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தாலும் படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார் என்ற புகார் இன்றளவில் இருப்பது நடிகர் சிம்பு மீது தான். ஆனால் இதை தற்போது நடிகர் சங்க செயலாளர் விஷாலே செய்து கொண்டு இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகர் விஷால், தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை தமிழ்,தெலுங்கு, ஹிந்தி,மலையாளம் என பான் இந்தியா படமாக வெளியிட தயாரிப்பாளர் வினோத்குமார் திட்டமிட்டிருக்கிறார்.
இதற்காக படப்பிடிப்புகள் விரைவாக நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தான் நடிகர் விஷால் படப்பிடிப்பிற்கு செல்லாமல் கல்தா கொடுத்து இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு வாரம் படப்பிடிப்பிற்கு போகாமல் இருந்ததால் ஏகப்பட்ட கோடிகள் நஷ்ட எனக் கூறப்படுகிறது. இதற்காக தயாரிப்பாளர் விஷாலை தொடர்பு கொள்ள ட்ரை செய்து முடியாமல் போக அவர் பெற்றோரிடம் பேசி இருக்கிறார்.
இதை கேட்ட அவர்கள் தங்களுக்கு இந்த தகவல் புதிது தான். இனி இப்படி நடக்காமல் பார்த்து கொள்வதாக உறுதி அளித்தனராம். இருந்தும் பிரச்சனை சரியாகாமல் விஷால் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து, உதயநிதி என் நண்பர் என விஷால் கூறிக்கொண்டு இருப்பதால் அவரிடமே இந்த பிரச்சனையை எடுத்து செல்லவும் மார்க் ஆண்டனி தயாரிப்பாளர் முடிவு செய்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.