பிரேம்ஜி கல்யாணத்துக்கு வந்த சிக்கல்.. இப்படி சைலாண்ட்டா இருந்தா எப்படி?!.. சீக்கிரம் சொல்லுங்கப்பா!..

Premji: தமிழ் திரையுலகில் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் விஷால், சிம்பு மற்றும் பிரேம்ஜி. இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் 2வது மகன்தான் இந்த பிரேம்ஜி. சிறு வயது முதலே இசையில் அதிக ஆர்வமும் கொண்டவர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் படங்களில் பாடல்களையும் பாடியிருக்கிறார். அண்ணன் வெங்கட்பிரபு சினிமாவில் இயக்குனராக துவங்கியவுடன் அவர் இயக்கும் படங்களில் நடிக்க துவங்கினார். அப்படித்தான் சென்னை 28 படத்தில் அறிமுகமானார். திரையில் ரஜினி மற்றும் சிம்புவை காப்பி அடிப்பது இவரின் வழக்கம்.
இதையும் படிங்க: புரமோஷனுக்காக எதையும் செய்வது புரமோஷன் ஆகாது… சந்தானத்தினை பொளந்த பிரபலம்…
அவர்களை போலவே விரல்களில் வித்தை காட்டுவார். ரசிகர்களுக்கும் இவரை பிடித்துப்போனது. அதன்பின் வெங்கட்பிரபு இயக்கிய சரோஜா, பிரியாணி, மாஸ், மங்காத்தா ஆகிய படங்களில் நடித்தார். மற்ற இயக்குனர்களின் இயக்கத்திலும் சில படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் ஓடவில்லை. சில படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார்.
பிரேம்ஜிக்கு எப்போது திருமணம் என்கிற கேள்வி பல வருடங்களாக வெங்கட்பிரபுவையும், பிரேம்ஜியையும் துரத்தி வருகிறது. இந்நிலையில்தான் கடந்த 2 வருடங்களாக அவர் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும் இந்த வருடம் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது.
இதையும் படிங்க: ‘மாநாடு’ பிடிக்கலைனுட்டாங்க.. ஹீரோ ரெடியா இருக்கனும்! பார்ட் 2 பற்றி தயாரிப்பாளர் சொன்னதை கேளுங்க
ஒருபக்கம், பிரேம்ஜி காதலிக்கும் பெண் இவர்தான் என ஒரு பெண்ணின் புகைப்படத்தையும் சிலர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தனர். ஆனால், உண்மையில் பிரேம்ஜி காதலிக்கும் பெண் அவரில்லை என சொல்லப்படுகிறது. அதோடு, இதில் அப்செட் ஆன பிரேம்ஜியின் காதலி ‘இன்னும் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்?’.. என் புகைப்படத்தை பகிர்ந்து ‘இவர்தான் நான் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்’ என சொல்லிவிடுங்கள்’ என கூறி வருகிறாராம்.
ஆனால், என்ன காரணமோ பிரேம்ஜி இன்னமும் அதை செய்யாமல் இருக்கிறார். இந்நிலையில்தான் அவரின் தங்கை பவதாரிணி இப்போது மரணமடைந்துள்ளார். எனவே, சில மாதங்கள் அவர் திருமணம் செய்து கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.