Cinema News
தங்கலானுக்கு வச்சிட்டாங்க ஆப்பு!.. கடைசி நேரத்துல இப்படியா?!.. ரிலீஸ் ஆகுமா?!….
Thangalan: தமிழ் சினிமாவில் கமலுக்கு பின் சிறந்த நடிகராக பார்க்கப்படுபவர் சியான் விக்ரம். வாலிப வயதிலேயே சினிமாவில் நடிப்பதின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், சரியான வாய்புகள் இல்லாமல் இருந்தார். சேது திரைப்படம் அவரின் சினிமா வாழ்க்கையை மாற்றியது. அதன்பின்னரே சியான் விக்ரம் என அழைக்கப்பட்டார்.
அதன்பின் தில், தூள், சாமி என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். அடுத்த சூப்பர்ஸ்டார் இவர்தான் என பத்திரிக்கைகள் எழுதியது. விக்ரமுக்கு ஒரு கதையில் நடிப்பதை விட வித்தியாசமான தோற்றம் கொண்ட கதாபத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதிலேயே ஆர்வம் அதிகம்.
அதனால்தன் காசி, பிதாமகன், ஐ போன்ற படங்களில் நடித்தார். அதன் தொடர்ச்சியாக பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் திரைப்படம்தான் தங்கலான். சுதந்திரத்திற்கு முன்பு கர்நாடக தங்க சுரத்தில் வேலை பார்த்த தமிழர்களின் வாழ்வியல் பற்றிய கதை இது. இந்த படத்திற்காக வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார் விக்ரம்.
இதுவரை இப்படி ஒரு தோற்றத்தில் அவர் நடித்ததில்லை என சொல்லுமளவுக்கு மிகவும் புதிய தோற்றத்தில் மிரட்டி இருக்கிறர். இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கி இருப்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் விக்ரமின் மனைவியாக மலையாள நடிகை பார்வதி நடித்திருக்கிறார்.
மேலும், மாளவிகா மோகனன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும், பசுபதி, ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வருகிற 15ம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது. எனவே, இப்படத்தை காண விக்ரம் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
இன்னும் 2 நாட்களில் இப்பபடம் வெளியாகவுள்ள நிலையில் நீதிமன்றம் மூலம் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. இப்படத்தை தயாரித்துள்ள ஞானவேல் ராஜா அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பெற்ற கடனை திருப்பு கொடுக்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிபதி ‘படத்தை வெளியிடும் முன் ஒரு கோடியை தயாரிப்பாளர் தரப்பு நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும்’ என நிபந்தனை விதித்துள்ளார். எனவே, ஒரு கோடியை ஞானவேல் ராஜா டெபாசிட் செய்தால் மட்டுமே தங்கலான் படம் வெளியாகும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.