AR Rahman Concert: ஒரே நாளில் ரஹ்மானின் மொத்த புகழுக்கும் வேட்டு வைத்த கதையாகி போனதுதான் மறக்குமா நெஞ்சம் இசை கச்சேரி. இதில் சிலர் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவே என புகார் தெரிவித்த சர்ச்சையில் இன்னும் சில ரகசியங்களும் கசிந்துள்ளது.
சென்னையில் கடந்த ஞாயிறுக்கிழமை நடந்தது மறக்குமா நெஞ்சம் இசை கச்சேரி. இதில் பாசிட்டிவ் விமர்சனங்களை விட சர்ச்சை தான் அதிகமாக சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக வெளிவந்தது. கச்சேரிக்கு ஒதுக்கப்பட்ட அளவினை விட எக்கச்சக்கமான அளவில் டிக்கெட் விற்கப்பட்டு இருக்கிறது.
இதையும் வாசிங்க: கால் சென்டர்ல கமல்ஹாசன்!.. அமெரிக்காவுல என்னை வேலை பண்ணிட்டு இருக்காரு பாருங்க ஆண்டவர்!..
இந்த சர்ச்சையை குறித்து பேசும் போது 4000 டிக்கெட் தான் அதிகமாக விற்கப்பட்டு இருக்கிறது. அதனை வாங்கிய ரசிகர்கள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இமெயில் செய்யுங்கள். உடனே காசினை திருப்பி கொடுப்போம் என உறுதியளிக்கப்பட்டது. அதன்படி 400க்கும் அதிகமானோருக்கு டிக்கெட் பணம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் ப்ளூசட்டை மாறன், தன்னுடைய ட்விட்டரில் 20000 டிக்கெட்டுக்கு மட்டுமே தாம்பரம் காவல்துறையிடம் இருந்து அனுமதி வாங்கியது. ஆனால் அதை விட அதிகமாக கிட்டத்தட்ட 40000 டிக்கெட்டினை அச்சடித்து விற்பனை செய்து இருக்கின்றனர்.
இதையும் வாசிங்க: ஹெச்.வினோத் படத்துக்காக மீண்டும் துப்பாக்கி எடுக்கும் கமல்ஹாசன்!.. மெர்சலாக்கும் டிரெய்னிங் வீடியோ…
முன்னதாக நிகழ்ச்சியை நடத்திய ஏசிடிசி நிறுவனம் 37000 டிக்கெட் விற்கப்பட்டதாக தெரிவித்தது. இந்நிலையில் அனுமதி கடிதத்தில் 20000 பேர் எனக் கூறிப்பிடப்பட்டு இருந்ததால் தான் கச்சேரிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில் கூட எப்படி ஊழல் நடத்த முடிந்தது என காவல்துறை தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தற்போது இந்த செய்தி பலரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் என்ன சொல்ல போகிறார்? சென்னையை தகவைத்து கொள்ள சொன்னவர். வாங்கிய அனுமதியை விட இரண்டு மடங்கு அதிக டிக்கெட் விற்கப்பட்ட பிரச்னையை எப்படி கையாளுவார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆர் ஜே…
Pushpa 2:…
சமீபத்தில் தனுஷ்,…
ஏ ஆர்…
Biggboss Tamil:…