மே 1ம் தேதி வெளியாகும் 4 படங்கள்!. சூர்யாவுக்கு கை கொடுக்குமா ரெட்ரோ?!…

திரையுலகில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சில புதிய புகைப்படங்கள் வெளியாவது வழக்கம். ஆனல, அஜித் மட்டும் தனது படங்களை ஒருநாள் முன்பே அதாவது வியாழக்கிழமையே ரிலீஸ் செய்தார். அதற்கு காரணம் அவருக்கு இருக்கும் சாய் பாப செண்டிமெண்ட்தான். வியாழக்கிழமை பாபாவுக்கு உகந்த நாள் என்பதால் கடந்த பல வருடங்களாகவே அவரின் படங்கள் வியாழக்கிழமைகளில் வெளியாகி வருகிறது.
அஜித்தை தொடர்ந்து இப்போது பலரும் தங்களின் படங்களை வியாழக்கிழமைகளில் ரிலீஸ் செய்ய துவங்கிவிட்டனர். அதேபோல், பெரிய நடிகர்கள் தங்களின் படங்களை தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு, ஆயுத பூஜை, வினாயகர் சதுர்த்தி போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் வெளியிட ஆசைப்படுவார்கள். அந்தவகையில் மே 1ம் தேதியும் ஒரு முக்கியமான ரிலீஸ் தேதியாக மாறிவிட்டது.

ஏனெனில், அந்த தேதியில் உழைப்பார்கள் தினம் வருகிறது. அந்த வகையில் வருகிற மே 1ம் தேதி தமிழகத்தில் 4 திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. சூர்யாவின் ரெட்ரோ படம் இதே தேதியில் ரிலீஸாகவுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் இது. சூர்யாவுக்கு கங்குவா படம் தோல்விப்படமாக அமைந்தநிலையில் ரெட்ரோ படத்தின் ரிசல்ட் அவருக்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
சூர்யாவுக்கும் இந்த படத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. இந்த படத்திற்காக ஹைதராபாத், கேரளா என பல ஊர்களுக்கும் சென்று சூர்யா புரமோஷன் செய்து வருகிறார். அடுத்து அறிமுக இயக்குனர் அபிஷன் இயக்கியுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படமும் மே 1ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த திரைப்படத்தில் சசிக்குமார், சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும், யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக் உள்ளிட்ட சிலரும் நடித்துள்ளனர். இலங்கை தமிழர்களை தமிழக அரசு எப்படி நடத்துகிறது என்பதை உணர்ச்சிப்பூர்வமாக காட்டியிருக்கிறார்கள். அயோத்திக்கு பின் சசிக்குமாருக்கு டூரிஸ்ட் ஃபேமிலி ஒரு முக்கியமான படமாக அமையவிருக்கிறது.

அடுத்து தெலுங்கு நடிகர் நானியின் HIT 3 படம் தமிழில் வெளியாகவுள்ளது. இப்படம் தெலுங்கில் உருவானாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்காக மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே HIT, HIT 2 ஆகிய படங்கள் வெற்றி என்பதால் இப்போது 3ம் பாகம் உருவாகியுள்ளது. ரத்தம் தெறிக்கும் அதிரடி ஆக்சன் படமாக HIT 3 உருவாகியுள்ளது. அடுத்து ஹாலிவுட் படமான Thunderbolts படமும் மே 1ம் தேதியான நாளை தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.