latest news

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்

கடந்த வாரம் வெளியான முக்கியமான படங்கள் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் திரையரங்குகளில் சில புதிய படங்கள் வெளியாகின்றன. இது குறித்து இங்கு காண்போம்.

காந்தி டாக்ஸ் (Gandhi Talks):

விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி மற்றும் அதிதி ராவ் நடிப்பில் உருவாகியுள்ள காந்தி டாக்கிஸ் இந்த வாரத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பட்டியலில் உள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த பேசும்படத்திற்கு பின் வெளிவர உள்ள இது வசனங்கள் இல்லாத ஒரு ‘சைலன்ட் மூவி என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தினை கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ளார். இசை ஏ.ஆர்.ரகுமான். ஏற்கெனவே இரு பாடல்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கருப்பு பல்சர் (Karuppu Pulsar):

இது ஒரு ஆக்ஷன் மற்றும் மிஸ்டரி கலந்த த்ரில்லர் திரைப்படமாகும். லப்பர் பந்து படத்திற்கு பின் அட்டகத்தி கார்த்தி இரு வேடங்களில் நடித்து வெளிவரும் படம் கருப்பு பல்சர். மற்றும் மன்சூர் அலிகான், கலையரசன், ரேஷ்மா வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் ராஜேஷின் உதவி இயக்குனராக பணியாற்றிய முரளி கிரிஷ் இப்படத்தினை இயக்கியுள்ளார்.

லாக்டவுன் (Lockdown):

லைக்கா புரொடெக்சன் தயாரிப்பில் அனுபமா மகேஸ்வரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படம் நீண்ட நாட்களாகவே வெளியாகாமல் இருந்தது. இப்படம் ஒரு உளவியல் சார்ந்த திரில்லர் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சார்லி, நிரோஷா, லிவிங்ஸ்டன் மற்றும் அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
இயக்கம்: ஏ.ஆர். ஜீவா.

கிரானி (Granny):

வடிவுக்கரசி முக்கிய வேடத்தில் நடித்துள்ள கிரானி ஒரு ஹாரர் த்ரில்லர் திரைப்படம். விஜயகுமாரா இயக்கியுள்ள இப்படத்திற்கு செல்லையா பாண்டியன் இசையமைத்துள்ளார்

Published by
adminram