Cook with comali: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளியின் அடுத்த சீசன் தொடங்க இருப்பதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த முறை அறிவிப்பிலேயே அடி வாங்க தொடங்கி விட்டனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே பலருக்கும் ரொம்ப வேரிட்டாக இருக்கிறது. அதிலும் இரண்டாவது சீசன் உச்சக்கட்ட ஸ்ட்ரஸ்பஸ்டர் என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட நான்கு சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது.
ஆனால் இதில் ஐந்தாவது சீசன் டைவர்ஸன் போட்ட கதையாகி நிகழ்ச்சியின் தயாரிப்பு குழு வெளியேறியது. அவர்களை தொடர்ந்து நடுவரான வெங்கடேஷ் பட் உள்பட சில முக்கிய பிரபலங்களும் வெளியேற தொடங்கினர். இதனால் ஐந்தாவது சீசன் பரபரப்புடனே தொடங்கியது.
அதிலும் நிகழ்ச்சியில் இருந்து பிரியங்கா மற்றும் நடுவர் மணிமேகலைக்கு நடந்த பிரச்சனை வேறு மாதிரி மாறியது. பல ட்ரோல்களை சந்தித்தது. இதையடுத்து கடந்த சீசனில் ஓரளவு பழைய ரூட்டை பிடித்தனர். இந்நிலையில் அடுத்த சீசன் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இதில் இந்த சீசனின் மாற்றமாக போட்டியாளர் தனியாக இல்லாமல் ஜோடியாக களமிறங்க இருக்கின்றனர். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் இதுவும் பழைய தயாரிப்பு நிறுவனமான மீடியாமேசன் தற்போது நடத்தி வரும் கிச்சன் ஜோடிஸ் காப்பி என்று கலாய்க்க தொடங்கி விட்டனர்.
மீடியா மேசன் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொடர்ந்து ஜோடி போட்டியாளர்களை வைத்து கிச்சன் ஜோடிஸ் நடத்தி வருகின்றனர். மீண்டும் அவர்கள் கான்செப்ட்டை இப்படி அப்பட்டமாக காப்பி அடிப்பதற்கு அவர்களையே அழைத்து வந்து விடலாமே எனக் கமெண்ட் செய்து வருகின்றனர்.





