television

Vijay Tv: சன் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு கைமாறும் டாப் ஹிட் சீரியல்… இது என்ன புது கதையா இருக்கு?

Vijay Tv: பொதுவாக சினிமாக்கூட ஒரு டிவியில் பல முறை ஒளிபரப்பட்டாலும் கூட இன்னொரு தொலைக்காட்சிக்கு கொடுக்க மாட்டார்கள். அந்த டிஜிட்டல் உரிமையை கடைசி வரை குறிப்பிட்ட தொலைக்காட்சியே வைத்திருக்கும். ஆனால் தற்போது நிலைமை மாறி வருகிறது. 

தமிழ் சின்னத்திரையில் எப்போதுமே போட்டிக்கு ஆள் இல்லாமல் கெத்தாக வலம் வருவது சன் டிவிதான். அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் சீரியலுக்கு எக்கசக்க ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் ஏகப்பட்ட சீரியல்களை தொடர்ந்து களமிறக்குவார்கள். 

ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் சீரியல்களில் புதிய அத்தியாயம் எடுத்து வருகிறது விஜய் டிவி. சன் டிவிக்கு போட்டியாக தொடர்ந்து வித்தியாசமான கதைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, மகாநதி என சீரியல்கள் தற்போது இளசுகளிடம் பிரபலமாகி வருகிறது. 

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி போட்டியான சன் டிவியின் நாகினி தொடரை கைப்பற்றி இருக்கிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி பரபரப்பாக ஓடி வந்த நாகினி சீரியலின் 7வது சீசனை கைவசம் பற்றி நாகின் என்ற பெயரில் விஜய் தொலைக்காட்சி இன்று முதல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பு செய்கிறது. 

இதற்கு முன் இந்த ஸ்லாட்டில் ஒளிபரப்பாகி வந்த மகளே என் மருமகளே சரியான டிஆர்பி ரேட்டிங் இல்லாத காரணத்தில் கடந்த வெள்ளிக்கிழமையுடன் மூடுவிழா கொண்டாடி இருக்கின்றனர். ஆனால் சன்டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் நாகின் விஜய் டிவிக்கு டிஆர்பியை பெற்று தருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

Akhilan

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

2 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

4 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

4 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

5 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

6 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

12 hours ago