சிபி சக்ரவர்த்திக்கு ஆப்பு வைத்த ரஜினிகாந்த்... என்னப்பா திடீர் ட்விட்ஸ்டா?

by Akhilan |
ரஜினிகாந்த்
X

தமிழ் சினிமாவின் புது வரவு சிபி சக்ரவர்த்தி. டான் படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். இவர் அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தெரிகிறது. அப்படத்தினை லைகா தயாரிக்க இருந்ததாக தகவல்களும் கசிந்தது. அது தற்போது நடக்குமா என ஒரு குழப்பம் உருவாகி இருக்கிறது.

கோலிவுட்டின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் படங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். ரஜினி படத்திற்கு லீவ் வேண்டும் என நிகழ்வுகள் எல்லாம் நடக்கும். சினிமா டிக்கெட் முதற்கொண்டு ராக்கெட் உயரத்தில் இருக்கும். அவர் வந்து நின்றாலே படம் வெற்றி தான் என நினைக்கும் அளவுக்கு ஹிட் கிடைக்கும்.

ரஜினிகாந்த்

ஆனால், சமீபகாலமாக அந்த விண்டேஜ் ரஜினி மிஸ்ஸாகி இருக்கிறார். அண்ணாத்த படம் சரியான வரவேற்பை பெறவில்லை. தமிழ் சீரியல் ரேஞ்சாக இருக்கிறது என தொடர் நெகட்டிங் விமர்சனங்கள் தான் குவிந்தன. இதனால் ரஜினிகாந்தின் சம்பளம் கோடிகளில் இருந்து லட்சமாக மாறியது.

இதையும் படிங்க: தலைவர மட்டும் நம்பி வீணா போயிடாத!…டான் இயக்குனரை எச்சரிக்கும் நண்பர் வட்டாரம்….

இந்நிலையில், இவர் அடுத்து சிபி சக்ரவர்த்தி இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம். கமர்சியல் படமாகவும் உருவாக இருப்பதாக சேதிகள் வலம் வருகிறது. அப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கும் என கூறப்பட்டது. ஆனால், அந்த வாய்ப்பு தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் சென்றாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

ரஜினிகாந்த்

தனுஷுடனான விவகாரத்துக்கு பின்னர் ஐஸ்வர்யா மீண்டும் இயக்குனர் பணிகளை துவங்கி இருக்கிறார். அப்படத்தினை தயாரிக்க இருக்கிறதாம் லைகா. இதனால் சிபி சக்ரவர்த்தி மற்றும் ரஜினிகாந்த் படத்தினை லைகா தயாரிக்குமா என கேள்விகள் எழுந்துள்ளன. அதுமட்டுமல்லாமல், தனது மகளுக்கு இந்த வாய்ப்பை ரஜினி தான் வாங்கி கொடுத்ததாகவும் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவில்லையாம். இதற்கு வேறு நடிகரை தான் நடிக்க வைப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் சிபி சற்று ரீலேக்ஸ் ஆகியிருக்கிறாராம். பின்ன, அவர் வாய்ப்பை பிடிங்கிட்டா அந்த கவலையா இருக்கும்.

Next Story