More
Categories: Cinema News latest news

நடிப்பு அரக்கனை இழுத்து போட்ட தளபதி68..! ஒரு மினி கோலிவுட்டே உள்ள தான் இருக்கு போல..!

Thalapathy68: லியோ படத்தினை கவனிப்பு குறைஞ்சாச்சு அடுத்த ஆள கவனிங்க ரீதியில் அடுத்து ட்ரெண்டாகி விட்டது தளபதி68. விஜய் நடிக்கும் இந்த படத்தில் தினமும் ஒரு அப்டேட் வரிசையாகி இறக்கி கொண்டு இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது கோலிவுட்டின் டாப் சயின்ஸ் பிக்ஸன் கதையை இயக்கும் இயக்குனராக இருக்கிறார். மாநாட்டின் வெற்றிக்கு பின்னர் அவர் இயக்க இருக்கும் இந்த படமும் டைம் ட்ராவலை மையமாக வைத்து இயக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிக்க இருக்கிறாராம்.

Advertising
Advertising

இதையும் படிங்க: இவர் தான் இந்த படத்தின் முதல் சாய்ஸா… சிவாஜி கணேசனையே தூக்கி சாப்பிடும் அந்த பிரபலம்..!

தொடர்ந்து இப்படத்திற்காக அதீத தொழில்நுட்ப வேலைகளையும் படக்குழு சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் முடித்து வந்தது. சில கால ப்ரேக்கிற்கு பின்னர் விஜய் படத்தினை அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். எல்லாருமே அனிருத் பக்கம் செல்ல யுவன் ஷங்கர் ராஜாவிடம் திரும்பி இருக்கிறது இந்தகுழு.

ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து ஒரு படத்தில் மல்ட்டி ஸ்டார்களை இணைக்க அதிக முக்கியத்துவம் கோலிவுட் படங்களில் கொடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தலைவர்171ல் கூட அமிதாப், ராணா, ஃபகத் என மூம்மொழி கலைஞர்கள் இணைந்தனர். ஆனால் வெங்கட் பிரபு இதிலும் தனி ரூட்டை பிடித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: தீயாக பரவும் விஜய்-த்ரிஷா அந்தமாதிரி புகைப்படம்..! மோசம் போய்டியேமா! நினைத்து கதறும் குந்தவை ரசிகர்கள்…!

ஏற்கனவே விஜயுடன் பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட 90ஸ் ஹீரோக்கள் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. வில்லனாக மைக் மோகனும், சமீபத்தில் ஜெயராம் கூட இந்த படத்தில் இணைந்தனர். இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் ஒரு பிரபலமும் எண்ட்ரி கொடுத்து இருக்கிறாராம்.

நடிப்பு அரக்கன் என புது அடைமொழியை வாங்கி இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவும் இந்த படத்தில் இணைந்து இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஏற்கனவே மார்க் ஆண்டனி படத்தில் பெரிய வரவேற்பை பெற்ற எஸ்.ஜே.சூர்யா இந்த படத்திலும் மிரட்டுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Akhilan

Recent Posts