அடேய் யாரும் வராதீங்கடா.. இடமே இல்ல… தளபதி68ல் நடக்கும் களேபரம்… கலாய்க்கும் ரசிகர்கள்..!

Thalapathy68: விஜய் நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் தளபதி68 படத்தின் தொடர் அப்டேட்களால் ரசிகர்களே ஆச்சரியமாகி விட்டனர். இதில் தொடர்ச்சியாக படக்குழு குறித்த அறிவிப்புகளும் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அடுத்து ஒரு அறிவிப்பும் வந்து இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. இப்படம் பல பெரிய எதிர்பார்ப்பை மீறி நாளை ரிலீஸுக்கு தயாராகி விட்டது. ஒருவழியாக நிறைய சர்ச்சைகளை தாண்டி லியோ திரைக்கு வர இருக்கும் நிலையில் வசூல் வேட்டைக்காக படக்குழுவும் காத்து இருக்கிறது.
இதையும் வாசிங்க:லியோ படத்தை வெளியிட தடை!.. சோதனை மேல் சோதனை!.. கொஞ்சம் கேப் விடுங்கப்பா!…
இப்படத்தினை தொடர்ந்து விஜய் நடிக்கும் 68வது படத்தினை வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார். அப்படத்தினை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா தயாரிக்க இருக்கிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார்.
இப்படத்தின் கதையே பலருக்கு ஆச்சரியத்தினை கொடுக்க இருக்கிறது. முதல்முறையாக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்ற படக்குழு. விஜயை வைத்து ஏகப்பட்ட டெஸ்ட் செய்து இருக்கின்றனர். சில பல விஎஃப்எக்ஸ் பணிகளும் நடந்ததாம். இதை தொடர்ந்து படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது.
அதையடுத்து படக்குழு பாடலுடன் படப்பிடிப்பை இந்த மாதத்திலே தொடங்கி விட்டது. இப்படத்தில் படக்குழு குறித்த அறிவிப்புகளும் ஆச்சரியமாகி இருக்கிறது. முதலில் இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா இணைந்தனர். விஜயுடன் போட்டி நாயகனாக இருந்த பிரசாந்த் இணைந்ததே ஆச்சரியமாக இருந்தது.
இதையும் வாசிங்க: கவுதம் மேனனுக்கு சம்பளம் இத்தனை கோடியா?!.. பேசாம டைரக்ஷனை விட்டு நடிகராவே மாறிடலாம்!..
இதுவரை பெரிய கூட்டம் என பலர் கலாய்த்து கொண்டு இருக்கும் நிலையில் இன்னொரு சுவாரஸ்ய அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. அதில் தளபதி68 படத்தில் ஜெயராம் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தில் அவர் கதாபாத்திரம் ஹிட் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.