எதிர்நீச்சலுக்கு வரும் புது வில்லன்… ஆக மொத்தம் ஒன்னும் உருப்புடுறாப்ல தெரியல…

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்தான் எதிர்நீச்சல். ஆரம்பத்தில் நன்கு பயணித்த இந்த சீரியல் இந்த நாடகத்தில் நடித்த மாரிமுத்து இறந்தபின் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது என்றுதான் கூறவேண்டும். இவருடைய கதாபாத்திரத்திறகு பதிலாக கொண்டுவரபட்டவர் நடிகர் வேலராம மூர்த்தி.
ஆனால் இவரின் கதாபாத்திரம் பெரிதளவில் மக்கள் விரும்பாதவிதமாக அமைந்தது. அதனால் இரண்டு நாட்கள் மட்டும் சீரியலில் தலையை காட்டிவிட்டு சென்றுவிட்டார். இவர் இல்லாமல் எப்படி நாடகம் எடுக்க என யோசித்த இயக்குனர் கதையை மற்ற கதாபாத்திரங்களின் பக்கம் திருப்பினார்.
இதையும் வாசிங்க:அடேய் யாரும் வராதீங்கடா.. இடமே இல்ல… தளபதி68ல் நடக்கும் களேபரம்… கலாய்க்கும் ரசிகர்கள்..!
அப்படி நாடகத்தில் ஒரு விறுவிறுப்பு வேண்டும் எனும் நோக்கத்தில் ஏற்கனெவே முயற்சி செய்து இரு முறை தோற்ற கதையை திரும்பவும் கையில் எடுத்துள்ளார். ஏற்கனவே அப்பத்தாவை கொல்ல திட்டமிட்டு அது தோல்வியில் முடிந்தது. அதேபோல் ஜீவானந்தத்தையும் ஏற்கனவே கொல்ல திட்டமிட்டு அதுவும் தோல்வியையே சந்தித்தது. ஆனால் திரும்பவும் ஊரில் நடக்கவிருக்கும் திருவிழாவில் இருவரையும் கொல்ல திட்டமிட்டுள்ளனர்.

ethirneechal new villain
இது ஒரு பக்கம் இருக்க கதையில் நேற்று புதிதாக ஒரு வில்லன் வந்துள்ளார். இவர் கதைப்படி ஜனனியின் தம்பி. ஜனனியின் அப்பா நாச்சியப்பனின் அண்ணன் பையனாக வில்லன் வந்துள்ளார். பாரம்பரிய முறைகளை பின்பற்றும் குடும்பத்திலிருந்து வந்த இவர் தந்து சித்தப்பாவான நாச்சியப்பனின் மேல் கோபத்தில் உள்ளார். ஏனென்றால் நாச்சியப்பன் அந்த காலத்தில் காதல் திருமணம் செய்துள்ளாராம். அதனால் அவரின் குடும்பமே அவர் மேல் கோபத்தில் உள்ளனராம்.
இதையும் வாசிங்க:மியூசிக் மனைவியை சொகுசா வச்சிக்கிறதே அந்த காமெடி ஹீரோ தானா?.. ஆத்தி எப்படியெல்லாம் கிளம்புது!..
என்னதான் புதுபுது கதாபாத்திரங்களை உள்ளே இறக்கினாலும் கதையின் சுவாரஸ்யம் இன்னும் வரவில்லை என ரசிகர்கள் கருதுகின்றனர். மேலும் இக்கதை முன்பு இருந்தது போல் எப்போதுதான் சூடு பிடிக்குமோ எனும் ஆவலில் ரசிகர்கள் உள்ளனர்.