ஜோதிகா தனக்கு கம்ஃபடபுளா இல்லாத நடிகர்கள் என சில கோலிவுட்டின் ஸ்டார் நடிகர்களை கூறி இருப்பதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வாரிசு. இப்படத்தினை வம்சி இயக்கி இருக்கிறார். ராஷ்மிகா, ஷாம், குஷ்பூ, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜயின் சகோதரராக ஷாம் நடித்து இருக்கிறார்.
வாரிசு படத்தின் ப்ரோமோஷனுக்காக ஷாம் தற்போது தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார். அதில் விஜய் குறித்தும், வாரிசு படம் குறித்தும் நிறைய தகவல்களை தெரிவித்து வருகிறார். ஷாம் 12பி படத்தில் தான் அறிமுகமானார். இந்த படத்தில் அவருக்கு ஜோதிகா மற்றும் சிம்ரன் என இரண்டு முன்னணி நடிகைகள் ஜோடியாக நடித்திருந்தனர். இதுகுறித்து ஷூட்டிங்கில் விஜயிடம் பேசும் போது முதல் படத்திலேயே இரண்டு குதிரைகள் ஓட்டிட்டு வந்திருக்க யாருடா நீ என என்னிடம் கேட்டார் என ஷாம் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: பாபா படத்தின் ரி-ரிலீஸிலும் சொதப்பல்கள்… 7 வேண்டாம் 5 போதுமாம்.. மாற்றப்பட்ட புது கிளைமேக்ஸ் என்ன?
இந்த வீடியோவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காற்றின் மொழி ப்ரமோஷன் நேரத்தில் ஜோதிகா பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் தன்னால் அஜித், சூர்யா மற்றும் மாதவனுடன் மட்டுமே நடிப்பது கம்ஃபடபுளா இருக்கும். சில நடிகர்களுடன் தொடர்ந்து நடிப்பது எளிதாக இருக்காது எனக் குறிப்பிட்டு இருந்தார். இதனை விஜயிற்கு எதிர் தாக்குதலாக சிலர் பதிவிட தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
நான் சினிமாவில்…
Sivakarthikeyan: கடந்த…
Vignesh Shivan:…
சூர்யா நடிப்பில்…
நடிகர் ரஜினிகாந்த்…