Connect with us
kanmani_main

Cinema News

தேடி வரும் பட வாய்ப்புகள்…. வேண்டாமென தவிர்க்கும் நியூஸ் ரீடர்…!

சமீபகாலமாகவே நடிகைகளைவிட செய்தி வாசிப்பாளர்கள் ரசிகர்கள் மத்தியில் டிரண்டாகி வருகிறார்கள். முன்னதாக செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக வலம் வந்தார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. அதன் காரணமாக இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இந்நிலையில் தற்போது அந்த வரிசையில் செய்தி வாசிப்பாளர் கண்மணி இடம் பிடித்துள்ளார். சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் கண்மணியின் சேலை, ஹேர் ஸ்டைலுக்கு என்றே தனி பெண் ரசிகைகள் உள்ளனர். மேலும் இவருக்காகவே செய்தி பார்க்கும் இளைஞர் பட்டாளமும் உள்ளது.

kanmani1

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கண்மணி செய்தி வாசிப்பாளர் பணி குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தியும் ஏதோ ஒரு வித சந்தோஷத்தையும் துக்கத்தையும் கொடுக்கும்.

அதே போல் எனக்கு படங்கள், சீரியல் என்று நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், நான் மிகவும் ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்த துறை என்றால் அது நியூஸ் ரீடர் தான். அதனால் அதை விட்டுட்டு வேறு ஒரு துறையில் வேலை செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.

kanmani2

நான் இன்னும் இந்த துறையில் கற்றுக்கொண்டு சாதிக்க வேண்டும். எங்களை மாதிரி ஆட்களை அடையாளம் கண்டு பாராட்டும் போது ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. இந்த அடையாளம் நிரந்தரமாக இருக்க நான் கடுமையாக உழைத்தேன்” என கூறியுள்ளார்.

ரொம்ப நல்லதுங்க நீங்க நியூஸ் ரீடராவே இருங்க. பேசாம அனிதா சம்பத்தும் நியூஸ் ரீடராவே இருந்திருக்கலாம் தேவையில்லாம பிக்பாஸ் வந்து அவங்க இமேஜை அவங்களே டேமேஜ் செஞ்சுக்கிட்டாங்க என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

google news
Continue Reading

More in Cinema News

To Top