என்னங்க சொல்றீங்க? நியூஸ் ரீடர் கண்மணிக்கு கல்யாணமா? அதுவும் மாப்பிள்ளை இந்த சீரியல் ஹீரோவா?

Published on: March 9, 2022
kanmani
---Advertisement---

முன்னாடிலாம் படத்துலயும் சீரியல்லயும் நடிக்கிற ஹீரோயின தான் நம்ம பசங்க க்ரஷ்னு சொல்லிட்டு சுத்திட்டு இருந்தாங்க. ஆனா சமீபகாலமாவே நியூஸ் ரீடர்ஸும் நம்ம பசங்க லிஸ்ட்ல் சேர்ந்துட்டாங்க. அந்த வகையில ஒரு சமயத்துல அனிதா சம்பத் தாங்க இளசுங்களோட ட்ரீம் கேர்ளா இருந்தாங்க.

இப்போ அவங்களுக்கு அடுத்ததா நம்ம சன் டிவி நியூஸ் ரீடர் கண்மணி தான் இளசுங்களோட ரீசன்ட் க்ரஷ். இவங்களுக்காகவே நியூஸ் பார்க்குற ஒரு கூட்டம் இருக்குங்க. இப்படி இருக்குற சூழல்ல நம்ம கண்மணிக்கு திடீர்னு கல்யாணம்னு ஒரு செய்தி பரவிட்டு இருக்கு. இத பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சில இருக்காங்க.

naveen
naveen

அதுவும் மாப்பிள்ளை வேற யாரும் இல்லைங்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சில ஒளிபரப்பாகி வரும் இதயத்தை திருடாதே சீரியல் ஹீரோ நவீன் தான் கண்மணியோட காதலராம். நவீன் சமீபத்துல அவரோட சோசியல் மீடியா பக்கத்துல “எதிர்பாராததை எதிர்பாருங்கள்” அப்படினு ஒரு போஸ்ட் போட்டுருந்தாருங்க.

அப்போ அந்த போஸ்ட் ஏன் போட்டாரு என்ன காரணம்னு யாருக்கும் புரியல. ஆனா அதுக்கான காரணம் இப்போ தான் புரியுது. அந்த போஸ்ட்ட போட்ட உடனேயே நவீன் தனது அம்மாவுடன் செய்திவாசிப்பாளர் கண்மணி சேகரி இருக்கும் போட்டோவை பதிவிட்டு காதல் எமோஜியையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.

kanmani-naveen
kanmani-naveen

இதை கண்மணி சேகரும் அவரோட சோசியல் மீடியா பக்கத்துல பதிவிட்டு பின்னணியில் கனா காண்கிறேன் என்ற பாடலையும் ஒலிக்கவிட்டுள்ளார். இதையெல்லாம் பார்க்கும் போது நவீனும், கண்மணியும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தெரிகிறது. பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தாலும் கண்மணியோட பேன்ஸ் மட்டும் கொஞ்சம் சோகத்துல இருக்காங்க.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment