×

10 மணிநேரம்… 100 இளையராஜா பாடல்கள் – இடைவிடாத இசைமழையில் நனைத்த கலைஞன் !

திருச்சூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பின்னனி பாடகர் அனூப் சங்கர் இடைவிடாமல் 100 பாடல்களை 10 மணிநேரம் பாடி சாதனை புரிந்துள்ளார். திருச்சூரைச் சேர்ந்த பின்னணி பாடகரான அனூப் சங்கர் என்பவர் கோழிக்கோடில் உள்ள தாகூர் நூற்றாண்டு மண்டபத்தில் 10 மணிநேரம் இடைவிடாமல் 100 இளையராஜா பாடல்களை பாடி அசத்தியுள்ளார். சிறுவயதில் இருந்தே இளையராஜாவின் ரசிகனாக வளர்ந்த அனூப் அவரைக் கௌரவிக்கும் விதமாக இந்த இசை மராத்தானை நிகழ்த்தியுள்ளார். இந்த இசை நிகழ்ச்சியில் இளையராஜாவின் முக்கியமான பாடல்களான
 
10 மணிநேரம்… 100 இளையராஜா பாடல்கள் – இடைவிடாத இசைமழையில் நனைத்த கலைஞன் !

திருச்சூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பின்னனி பாடகர் அனூப் சங்கர் இடைவிடாமல் 100 பாடல்களை 10 மணிநேரம் பாடி சாதனை புரிந்துள்ளார்.

திருச்சூரைச் சேர்ந்த பின்னணி பாடகரான அனூப் சங்கர் என்பவர் கோழிக்கோடில் உள்ள தாகூர் நூற்றாண்டு மண்டபத்தில் 10 மணிநேரம் இடைவிடாமல் 100 இளையராஜா பாடல்களை பாடி அசத்தியுள்ளார். சிறுவயதில் இருந்தே இளையராஜாவின் ரசிகனாக வளர்ந்த அனூப் அவரைக் கௌரவிக்கும் விதமாக இந்த இசை மராத்தானை நிகழ்த்தியுள்ளார்.

இந்த இசை நிகழ்ச்சியில் இளையராஜாவின் முக்கியமான பாடல்களான ஜனனி ஜனனி , அம்மா என்றழைக்காத, சுந்தரி கண்ணால் ஒரு சேதி…(தளபதி), கண்ணே கலைமானே…(மூன்றாம் பிறை), அந்த நிலாவத் தான் நான்…(முதல் மரியாதை), தூளியிலே ஆட வந்த..(சின்ன தம்பி) போன்ற மெலடி பாடல்கள் இடம்பெற்றன. 100 பாடல்களை பாடி முடிக்கும் வரை அவர் தண்ணீர் கூட இடையில் குடிக்கவில்லை என்பது ரசிகர்களை நெகிழ வைத்தது.

From around the web

Trending Videos

Tamilnadu News