×

ஒரு எலியால் 12 மணிநேரம் தாமதமான விமானம் ! –ஆந்திராவில் ஒரு சுந்தரா டிராவல்ஸ் !

ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டிணம் செல்ல இருந்த விமானம் ஒரு எலியால் 12 மணிநேரம் தாமதமாக சென்றது. ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து விசாகப்பட்டினம் புறப்படத் தயாரான விமானத்தில் எதிர்பாராத விதமாக எலி ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்துவிட்ட ஊழியர்கள் அதனைப் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் எவ்வளவோ முயன்றும் அதனை பிடிக்க முடியவில்லை. இதனால் காலை 6 மணிக்கே புறப்படவேண்டிய விமானம் தாமதமாகிக் கொண்டே போனது. விமானத் தாமதத்தால் பயணிக்குள் அதிருப்தியடைந்தனர். பின்னர் ஒருவழியாக எலியை
 
ஒரு எலியால் 12 மணிநேரம் தாமதமான விமானம் ! –ஆந்திராவில் ஒரு சுந்தரா டிராவல்ஸ் !

ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டிணம் செல்ல இருந்த விமானம் ஒரு எலியால் 12 மணிநேரம் தாமதமாக சென்றது.

ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து விசாகப்பட்டினம் புறப்படத் தயாரான விமானத்தில் எதிர்பாராத விதமாக எலி ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்துவிட்ட ஊழியர்கள் அதனைப் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் எவ்வளவோ முயன்றும் அதனை பிடிக்க முடியவில்லை. இதனால் காலை 6 மணிக்கே புறப்படவேண்டிய விமானம் தாமதமாகிக் கொண்டே போனது. விமானத் தாமதத்தால் பயணிக்குள் அதிருப்தியடைந்தனர்.

பின்னர் ஒருவழியாக எலியை மாலை 5 மணிக்குப் பிடித்தனர் ஊழியர்கள். அதன் பின் அந்த விமானம் 11.30 மணிநேரம் தாமதமாக புறப்பட்டது. இந்த விஷயம் சமூகவலைதளங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News