×

அடப்பாவமே! ‘இருட்டு’ படத்திற்கு இப்படி ஒரு பிரச்சனையா?..

இருட்டு படம் தணிக்கை செய்யப்படும் போது ஏராளமான காட்சிகள் நீக்கப்பட்ட சம்பவம் தெரிய வந்துள்ளது. நேபாளி, தொட்டி ஜெயா, 6 மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட சில படங்களை இயக்கிவர் வி.இசட். துரை. சுந்தர் சி. உள்ளிட்ட சிலர் நடித்துள்ள ‘இருட்டு’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் நாளை தமிழகமெங்கும் வெளியாகிறது. பயங்கர திகில் காட்சிகள் நிறைந்த பேய் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் பற்றி கருத்து தெரிவித்துள்ள இசட். துரை ‘ பொதுவாக பேய் படங்கள் இந்து மற்றும் கிறிஸ்துவ
 
அடப்பாவமே! ‘இருட்டு’ படத்திற்கு இப்படி ஒரு பிரச்சனையா?..

இருட்டு படம் தணிக்கை செய்யப்படும் போது ஏராளமான காட்சிகள் நீக்கப்பட்ட சம்பவம் தெரிய வந்துள்ளது.

நேபாளி, தொட்டி ஜெயா, 6 மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட சில படங்களை இயக்கிவர் வி.இசட். துரை. சுந்தர் சி. உள்ளிட்ட சிலர் நடித்துள்ள ‘இருட்டு’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் நாளை தமிழகமெங்கும் வெளியாகிறது. பயங்கர திகில் காட்சிகள் நிறைந்த பேய் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

அடப்பாவமே! ‘இருட்டு’ படத்திற்கு இப்படி ஒரு பிரச்சனையா?..

இப்படம் பற்றி கருத்து தெரிவித்துள்ள இசட். துரை ‘ பொதுவாக பேய் படங்கள் இந்து மற்றும் கிறிஸ்துவ மத பின்னணியிலே உருவாக்கப்படும். ஆனால், இந்தியாவிலேயே முதன் முறையாக இஸ்லாமிய மத பின்னணியில் இருட்டு படம் உருவாகியுள்ளது. படத்தை பார்த்த கணிக்கை குழுவினர் படத்தில் பல காட்சிகள் மிகவும் பயமாக இருக்கிறது. ஏ சர்பிட்டிகேட் கொடுப்போம் என்றனர். அதை நாங்கள் ஏற்காததால் 10 காட்சிகளின் நீளத்தையும் பயமுறுத்தும் தன்மையையும் குறைத்தால் யு.ஏ தருகிரோம் எனக்கூறினார்கள்.

இது பேய் படம். ரசிகர்களை பயமுறுத்தவே காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதை குறைக்க சொன்னால் எப்படி என வாதிட்டோம். ஆனால், அவர்கள் ஏற்கவே இல்லை. எனவே, வேறு வழியில்லாமல் பயமுறுத்தும் காட்சிகளின் தன்மையை கொஞ்சம் குறைத்து யு/ஏ சர்டிபிகேட் வாங்கினோம்’ என தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News