×

சாண்டி என்னை தூக்கி எறிந்தாரா? – பொங்கி எழுந்த நடிகை காஜல்

Actres kajal pasupathi replied to netizen – பிக்பாஸ் வீட்டில் உள்ள நடன இயக்குனர் சாண்டி குறித்த கேள்விக்கு அவரின் முன்னாள் மனைவியும், நடிகையுமான காஜல் பசுபதி நெட்டிசன் ஒருவருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். சாண்டி ஏற்கனவே நடிகை காஜல் பசுபதியை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன்பின். சாண்டி 2வது திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில்தான், பிக்பாஸ் வீட்டிற்கு
 
சாண்டி என்னை தூக்கி எறிந்தாரா? – பொங்கி எழுந்த நடிகை காஜல்

Actres kajal pasupathi replied to netizen – பிக்பாஸ் வீட்டில் உள்ள நடன இயக்குனர் சாண்டி குறித்த கேள்விக்கு அவரின் முன்னாள் மனைவியும், நடிகையுமான காஜல் பசுபதி நெட்டிசன் ஒருவருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

சாண்டி ஏற்கனவே நடிகை காஜல் பசுபதியை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன்பின். சாண்டி 2வது திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில்தான், பிக்பாஸ் வீட்டிற்கு சென்று அவர் 50 நாட்களுக்கு மேல் இருந்து வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் அவர் கவினுடன் மட்டுமே நெருக்கமாக இருக்கிறர். இந்த வாரம் அவரும் எலுமினேஷன் லிஸ்டில் இருப்பதால் அவருக்கு ஆதரவளிக்க கவினின் ஆதரவாளர்கள் முடிவெடுத்துள்ளனர். இதைக்கண்ட அவரின் முன்னாள் மனைவி காஜல் ‘ ரசிகர்களின் மத்தியிலும் அழகான நட்பு பரவி வருகிறது. சிறப்பான உங்கள் வெற்றிக்கும், சந்தோஷத்திற்கும் கடவுள் ஆசிர்வதிப்பார்’ என சாண்டிக்கு ஆதரவாக டிவிட் செய்திருந்தார்.

இதைக்கண்ட ரசிகர் ஒருவர் ‘சாண்டி உன்னை குப்பை மாதிரி தூக்கி எறிஞ்சிட்டான். நீ அவனுக்கு கூஜா தூக்குறியா?’ என அநாகரீகமாக பதிவிட்டிருந்தார். இதைக்கண்டு கடுப்பான காஜல் ‘அவர் என்னை தூக்கி எறிஞ்சத நீ பாத்தியா? உன் அளவுக்கு கீழ இறங்கி பதில் சொல்ல நான் விரும்பல. பரஸ்பர சம்மதம் என ஒன்று உள்ளது. மத்தவங்க வாழ்க்கை பத்தி தெரியாம கதறாதா’ என பதிலடி கொடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News