×

சிறப்பான சம்பவம் இருக்கு! சுச்சி லீக்ஸ் சுசித்ராவின் அடுத்த அதிரடி…

ரேடியோ தொகுப்பாளினி மற்றும் பின்னணி பாடகியான சுசித்ரா ஒரு புதிய யுடியூப் சேனலை துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்கிற பெயரில் சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் தனுஷ், அனிருத், தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி உள்ளிட்ட சில பிரபலங்கள் சிலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விளக்கம் அளித்த சுசித்ரா தனது டிவிட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்து விட்டதாக கூறினார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. அவரின் கணவர்
 
சிறப்பான சம்பவம் இருக்கு! சுச்சி லீக்ஸ் சுசித்ராவின் அடுத்த அதிரடி

ரேடியோ தொகுப்பாளினி மற்றும் பின்னணி பாடகியான சுசித்ரா ஒரு புதிய யுடியூப் சேனலை துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்கிற பெயரில் சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் தனுஷ், அனிருத், தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி உள்ளிட்ட சில பிரபலங்கள் சிலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விளக்கம் அளித்த சுசித்ரா தனது டிவிட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்து விட்டதாக கூறினார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. அவரின் கணவர் கார்த்திக் அவரை விட்டுப்பிரிந்தார்.

சிறப்பான சம்பவம் இருக்கு! சுச்சி லீக்ஸ் சுசித்ராவின் அடுத்த அதிரடி

இந்நிலையில், சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சுசித்ரா ‘சுச்சி லீக்ஸ் விவகாரம் மற்றும் என் விவாகரத்து ஆகியவை ஒரே நேரத்தில் இருந்ததால் அந்நேரத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தேன். தேவையில்லாமல் தனுஷ், அனிருத் எல்லாவற்றையும் சம்பந்தப்படுத்தி புகைப்படங்கள் வெளியானது. நான் அவற்றை பார்க்கவில்லை. யார் இதை செய்தார்கள் என்பது காலப்போக்கில் தெரிய வரும். சில காலம் லண்டன் சென்று பிரெஞ்ச் சமையல் கற்றுக்கொண்டேன். சுச்சி குக் என்கிற பெயரில் யுடியூப் சேனல் துவங்கி அதை மக்களுக்கு கற்றுத்தர விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

சுசித்ராவின் யுடியூப் சேனலையும் யாரோ ஹேக் செய்து பரபரப்பான வீடியோக்களை வெளியிட்டால் என்ன ஆகுமோ என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News