×

கரகாட்டக்காரன் 2 எனக்கு வேண்டாம் – வாய்ப்பை மறுத்த ராமராஜன்

Actor Ramarajan – கரகாட்டக்காரன் 2 படத்தில் தனக்கு நடிக்க விருப்பமில்லை என நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார். 90களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் ராமராஜன். கங்கை அமரன் இயக்கத்தில் இவர் நடித்து வெளியான கரகாட்டக்காரன் வசூலில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியது. இந்நிலையில், கரகாட்டக்காரன் படத்தின் 2ம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் கங்கை அமரன் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், இப்படத்தில் நடிக்க ராமராஜன் மறுத்துவிட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. இதுபற்றி பேட்டியளித்துள்ள ராமராஜன் ‘ கரகாட்டக்காரன்
 
கரகாட்டக்காரன் 2 எனக்கு வேண்டாம் – வாய்ப்பை மறுத்த ராமராஜன்

Actor Ramarajan – கரகாட்டக்காரன் 2 படத்தில் தனக்கு நடிக்க விருப்பமில்லை என நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார்.

90களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் ராமராஜன். கங்கை அமரன் இயக்கத்தில் இவர் நடித்து வெளியான கரகாட்டக்காரன் வசூலில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியது.

கரகாட்டக்காரன் 2 எனக்கு வேண்டாம் – வாய்ப்பை மறுத்த ராமராஜன்

இந்நிலையில், கரகாட்டக்காரன் படத்தின் 2ம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் கங்கை அமரன் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், இப்படத்தில் நடிக்க ராமராஜன் மறுத்துவிட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுபற்றி பேட்டியளித்துள்ள ராமராஜன் ‘ கரகாட்டக்காரன் 2 பற்றி எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். கங்கை அமரன் கூட கடந்த வரும் என்னிடம் பேசினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். ஏனெனில், ஒரு முறை கரகத்தை எடுத்தாச்சு. வச்சாச்சு. இனிமேல் அதில் கை வைத்தால் தேன் கூட்டில் கை வைத்தது போல் ஆகிவிடும். எனவே, அதில் பங்கெடுக்க விரும்பவில்லை’ என அவர் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News