×

6 மியூசிக் டிரைக்டர்... ஒரே கதை... ஓடிடியில் மிரட்டுகிறது கசடதபற...

கசட தபற திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தற்போது நம்பத்தக்க தகவல்கள் உறுதிசெய்துள்ளன.
 
D7awIOqVUAA8em1

 கசட தபற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் வெளியானதுமே அது வழக்கமான ஆந்தாலஜி (Anthology) வகை படமாக இருக்குமோ என்ற எண்ணம் அனைவருக்கும் பரவலாக எழுந்தது.

அதை மறுத்த இயக்குநர் சிம்புதேவன், “வழக்கமான ஆந்தாலஜி என்பது ஒரு கதைக்கும் மற்றொரு கதைக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லாத சில சிறுகதைகளின் தொகுப்பாக இருக்கும். ஆனால் கசட தபற ஒரே கதை தான். ஆனால் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் ஒரே படம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ப்ரியா பவானி ஷங்கர், ரெஜினா கேஸண்ட்ரா, விஜயலட்சுமி , பிக்பாஸ் ஜனனி ஆகியோர் நடித்துள்ளனர். ஹரீஷ் கல்யாண், சந்தீப் கிஷன்,  ஜெய், மிர்ச்சி சிவா, சாந்தனு, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், கலையரசன்,  மற்றும் பலர் நடிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கியுள்ள திரைப்படம் கசட தபற.

கசட தபற படத்தை வி. ராஜலட்சுமியின் பிளாக் டிக்கட் கம்பெனி சார்பில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு, ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரனுடன் இணைந்து தயாரித்திருக்கிறார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம்  சிஎஸ், பிரேம்ஜி மற்றும் ஷான் ரோல்டன் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.

மேலும் எம்.எஸ்.பிரபு, சக்தி சரவணன், எஸ்.டி.விஜய் மில்டன், பாலசுப்ரமணியம், ஆர்.டி ராஜசேகர் மற்றும் எஸ்.ஆர்.கதிர் ஆகியோர் ஒளிப்பதிவைக் கையாண்டிருக்கிறார்கள். காசி விஸ்வநாதன், ராஜா முஹமது, ஆண்டனி, பிரவீன் KL, விவேக் ஹர்ஷன் மற்றும் ரூபன் ஆகியோர் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள்.  

கசட தபற திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தற்போது நம்பத்தக்க தகவல்கள் உறுதிசெய்துள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News