×

பாகுபலி3 விரைவில்? – ராஜமௌலியுடன் தீவிர பேச்சுவார்த்தை

பாகுபலி படத்தின் 3ம் பாகத்தை எடுப்பது குறித்து, சில பாலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குனர் ராஜமௌலியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவது தெரிய வந்துள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் இரண்டுமே பாக்ஸ் ஆபிசில் பெரிய ஹிட் அடித்துள்ளது. எனவே, இந்திய அளவில் பிரம்மாண்டமான இயக்குனராக ராஜமௌலி உருவெடுத்துள்ளார். இந்த படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பாலிவுட்டில் கான் படங்களை தாண்டி இது வசூலில்
 
பாகுபலி3 விரைவில்? – ராஜமௌலியுடன் தீவிர பேச்சுவார்த்தை

பாகுபலி படத்தின் 3ம் பாகத்தை எடுப்பது குறித்து, சில பாலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குனர் ராஜமௌலியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவது தெரிய வந்துள்ளது.

ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் இரண்டுமே பாக்ஸ் ஆபிசில் பெரிய ஹிட் அடித்துள்ளது. எனவே, இந்திய அளவில் பிரம்மாண்டமான இயக்குனராக ராஜமௌலி உருவெடுத்துள்ளார்.

இந்த படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பாலிவுட்டில் கான் படங்களை தாண்டி இது வசூலில் சாதனை படைத்துள்ளது. படம் வெளியாகி 9 நாளில் இப்படம் ரூ.1000 கோடி வசூலை எட்டியது. இதைக்கண்டு பாலிவுட் தயாரிப்பாளர்கள் மிரண்டு போயுள்ளனர்.

பாகுபலி அடுத்த பாகம் வருமா என ராஜமௌலியிடம் சிலர் கேள்வி எழுப்பிய போது, அதற்கு வாய்ப்பே இல்லை என அவர் மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், பாகுபலி மூன்றாம் பாகத்தை உருவாக்குதில், பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்கள் கரண் ஜோஹர் மற்றும் சோபு யர்லகட்டா ஆகியோர் ஆர்வமாக இருக்கிறார்கள். இதுகுறித்து அவர்கள் ராஜமௌலியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தற்போது ராஜமௌலிக்கு அதில் ஆர்வம் இல்லை என்றாலும், அவர்கள் மீது உள்ள மரியாதை காரணமாக மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் இருக்கிறாரம்.

இந்நிலையில், பாகுபலி படத்தின் கதையாசிரியரும், ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத், பாகுபலியின் தொடர்ச்சியாக ஒரு கதையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. அது சரியாக அமைந்து, அதை தயாரிக்க பாலிவுட் தயாரிப்பாளர்களும் முன்வந்தால், பாகுபலி 3ம் பாகம் உருவாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News