×

திமுக கூட்டங்களுக்கு நகைக்கடன் ரசீதுடன் வரும் மக்கள் – பொன்னார் பற்றவைத்த தீ !

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கவனம் ஈர்த்தது கூட்டுறவு வங்கிகளில் இருக்கும் நகைகள் தள்ளுபடி சம்மந்தமான அறிக்கைதான். மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றாலும் இடைத்தேர்தலில் அதிமுக போதுமான தொகுதிகளை வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. இதனால் திமுக அறிவித்த 5 பவுன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படுமா என சந்தேகங்கள் எழுந்துள்ளது. இது குறித்து பேசிய பொன் ராதாகிருஷ்ணன் திமுக எம்.பி.கள் 37 பேரும் தங்கள் சொத்துகளை விற்றுதான்
 
திமுக கூட்டங்களுக்கு நகைக்கடன் ரசீதுடன் வரும் மக்கள் – பொன்னார் பற்றவைத்த தீ !

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கவனம் ஈர்த்தது கூட்டுறவு வங்கிகளில் இருக்கும் நகைகள் தள்ளுபடி சம்மந்தமான அறிக்கைதான்.

மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றாலும் இடைத்தேர்தலில் அதிமுக போதுமான தொகுதிகளை வெற்றி பெற்று  ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. இதனால் திமுக அறிவித்த 5 பவுன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படுமா என சந்தேகங்கள் எழுந்துள்ளது.

இது குறித்து பேசிய பொன் ராதாகிருஷ்ணன் திமுக எம்.பி.கள் 37 பேரும் தங்கள் சொத்துகளை விற்றுதான் நகைக்கடன்களை அடைக்க வேண்டும் எனக் கொளுத்திப் போட்டார். இதையடுத்து நீலகிரிக்கு நன்றி சொல்ல சென்ற ஆ ராசாவிடம் சில பொதுமக்கள் நகைக்கடன் ரசீதுகளைக் காட்டி தள்ளுபடி செய்ய சொன்னார்கள். மேலும் இதேப்போல பலரும் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனால் திமுகவினர் பயங்கர அப்செட்டில் இருப்பதாகத் தெரிகிறது. அதனால் பொன் ராதா கிருஷ்ணன் செல்லும் கூட்டங்களில் கருப்புக்கொடி காட்ட திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News