×

சண்டைக் காட்சியில் தவறி விழுந்து பிரபல நடிகை காயம்!

பாலிவுட்டில் ஆலியா பட், அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர் நடித்து வரும் பிரம்மாண்ட சூப்பர் நேச்சுரல் படம் பிரமாஸ்திரா. பிரபல பாலிவுட் இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கும் இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டிடூடியோ தயாரிக்கிறது. பிரமாஸ்திரா படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியா நாட்டில் நடந்து வருகிறது. ஆலியா பட் நடிக்கும் சண்டைக் காட்சி நேற்று முன்தினம் படமாக்கப்பட்டது. ஆலியா பட் உயரமான கட்டிடத்தின் மீது நின்று கொண்டு பல்கேரிய சண்டைக் கலைஞா்களுடன் மோதினார். பாதுகாப்பிற்காக ஆலியா
 
சண்டைக் காட்சியில் தவறி விழுந்து பிரபல நடிகை காயம்!

சண்டைக் காட்சியில் தவறி விழுந்து பிரபல நடிகை காயம்!

பாலிவுட்டில் ஆலியா பட், அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர் நடித்து வரும் பிரம்மாண்ட சூப்பர் நேச்சுரல் படம் பிரமாஸ்திரா. பிரபல பாலிவுட் இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கும் இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டிடூடியோ தயாரிக்கிறது.

பிரமாஸ்திரா படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியா நாட்டில் நடந்து வருகிறது. ஆலியா பட் நடிக்கும் சண்டைக் காட்சி நேற்று முன்தினம் படமாக்கப்பட்டது. ஆலியா பட் உயரமான கட்டிடத்தின் மீது நின்று கொண்டு பல்கேரிய சண்டைக் கலைஞா்களுடன் மோதினார். பாதுகாப்பிற்காக ஆலியா பட் ரோப் கட்டியிருந்தார். அப்போது சண்டையிடும் காட்சியில் ஆலியாபட் தவறி விழுந்தார். ரேப்பின் நீளத்தில் சற்று வித்தியாசம் இருந்தால் தரையில் விழுந்தார்.

சண்டைக் காட்சியில் தவறி விழுந்து பிரபல நடிகை காயம்!

இதனால் அவருக்கு தோள் மற்றும் கை ஆகியவற்றில் காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆலியாபட் 15 நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனா். பிரமாஸ்திரா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. காயம் காரணமாக நடிகை ஆலியாபட் மும்பைக்கு திரும்ப இருக்கிறார் என்று பேசப்படுகிறது. இதை கேள்வி பட்ட ஆலியாபட் ரசிகா்கள் அதிர்ச்சியில் உள்ளனா்.

From around the web

Trending Videos

Tamilnadu News