×

16 வயதினிலே படத்துக்கு ரஜினி வாங்கிய சம்பளம் – ரகசியம் உடைத்த பாரதிராஜா

நடிகர் ரஜினிகாந்த் வருகிற 12ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். எனவே, அதை கொண்டாடும் வகையில் அவரின் ரசிகர்கள் இப்போதிலிருந்தே நலத்திட்ட உதவிகளை செய்ய துவங்கி விட்டனர். சமீபத்தில் வேலூரில் ரஜினி மக்கள் மன்றத்தின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில், இயக்குனர் பாரதிராஜா, கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பாரதிராஜா பேசியதாவது: எனக்கும் ரஜினிக்கும் 48 வருட கால நட்பு உள்ளது. 16 வயதினிலே படத்தில் நடிப்பதற்காக ரஜினி ரூ.5
 
16 வயதினிலே படத்துக்கு ரஜினி வாங்கிய சம்பளம் – ரகசியம் உடைத்த பாரதிராஜா

நடிகர் ரஜினிகாந்த் வருகிற 12ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். எனவே, அதை கொண்டாடும் வகையில் அவரின் ரசிகர்கள் இப்போதிலிருந்தே நலத்திட்ட உதவிகளை செய்ய துவங்கி விட்டனர்.

சமீபத்தில் வேலூரில் ரஜினி மக்கள் மன்றத்தின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில், இயக்குனர் பாரதிராஜா, கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பாரதிராஜா பேசியதாவது:

எனக்கும் ரஜினிக்கும் 48 வருட கால நட்பு உள்ளது. 16 வயதினிலே படத்தில் நடிப்பதற்காக ரஜினி ரூ.5 ஆயிரம் சம்பளம் கேட்டார். இது மிகவும் சிறிய பட்ஜெட் திரைப்படம். எனவே, அவ்வளவு கொடுக்க முடியாது என்றேன். எனவே, ரஜினி ரூ.4 ஆயிரம் கேட்டார். அதுவும் முடியாது என்றேன். கடைசியில் ரஜினிக்கு ரூ.2500 சம்பளமாக கொடுத்தேன். இன்னமும் அவருக்கு ரூ.500 சம்பள பாக்கி இருக்கிறது. தற்போதும் ரஜினி என்னிடம் ‘அண்ணே அந்த 500’ என்று விளையாட்டாக கேட்பார்.

ரஜினியுடன் எனக்கு சில முறை கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவருக்கு எதிராக அறிக்கை கூட வெளியிட்டேன். அப்போதும் ரஜினி என் மீது கோபப்படாமல் இருந்தார். அதுதான் ரஜினி.. எல்லோரும் ரஜினியாக பிறக்க முடியாது. அவருக்கு ஒரு சக்தி இருக்கிறது. அதுதான் அவரை நோக்கி பலரையும் இழுக்கிறது’ என்று தெரிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News