×

கமல் போஸ்டரில் சாணி அடித்தேன் – ராகவா லாரன்ஸ் விளக்கம்

தர்பார் விழாவில் கமல்ஹாசன் பற்றி பேசியது குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார். கடந்த சனிக்கிழமை ரஜினி நடித்த தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ் ‘ சிறு வயதில் கமல் பட போஸ்டரில் சாணி அடிப்பேன். ஆனால், தற்போது அவர்கள் இருவரும் ஒன்றாக சேருவதை பார்க்கும் போது எதோ நடக்கப் போகிறது என்று தோறுகிறது’ எனப்பேசியிருந்தார். எனவே, சமூக வலைத்தளங்களில் கமல் ரசிகர்கள் லாரன்ஸுக்கு
 
கமல் போஸ்டரில் சாணி அடித்தேன் – ராகவா லாரன்ஸ் விளக்கம்

தர்பார் விழாவில் கமல்ஹாசன் பற்றி பேசியது குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை ரஜினி நடித்த தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ் ‘ சிறு வயதில் கமல் பட போஸ்டரில் சாணி அடிப்பேன். ஆனால், தற்போது அவர்கள் இருவரும் ஒன்றாக சேருவதை பார்க்கும் போது எதோ நடக்கப் போகிறது என்று தோறுகிறது’ எனப்பேசியிருந்தார்.

எனவே, சமூக வலைத்தளங்களில் கமல் ரசிகர்கள் லாரன்ஸுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இதுபற்றி விளக்கம் அளித்து லாரன்ஸ் ‘நான் பேசிய முழு வீடியோவை பார்த்தால் உண்மை புரியவரும். கமல் சார் மீது அதிக மரியாதை வைத்துள்ளேன். நான் பேசியது தவறு என நினைத்தால் யாரிடம் வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்பேன் . சிறு வயதில் ரஜினி சார் மீது இருந்து ஆதீத அன்பில் அப்படி செய்துள்ளேன். கமல் சாருக்கு எதிராக நான் எதுவும் பேசவில்லை. சிலர் இதை தவறாக திசை திருப்பு வருகிறார்கள். இதுபற்றி யாரிடமும் விளக்கம் அளிக்க தேவையில்லை’ என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News