×

மேஜிக்மேனுடன் இணைகிறார் சமந்தா

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிசியாக நடித்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா, இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 61’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் விஜய் இந்த படத்தில் மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வருகிறார் என்பதும், மூன்றாவது கேரக்டர் மேஜிக்மேன் என்றும் கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் பரவி வருகின்றது. இந்த மேஜிக்மேன் விஜய்க்குத்தான் சமந்தா ஜோடியாக நடிக்கவுள்ளார். மேஜிக்மேன் விஜய், சமந்தா சம்பந்தப்பட்ட
 
மேஜிக்மேனுடன் இணைகிறார் சமந்தா

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிசியாக நடித்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா, இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 61’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் விஜய் இந்த படத்தில் மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வருகிறார் என்பதும், மூன்றாவது கேரக்டர் மேஜிக்மேன் என்றும் கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் பரவி வருகின்றது. இந்த மேஜிக்மேன் விஜய்க்குத்தான் சமந்தா ஜோடியாக நடிக்கவுள்ளார்.

மேஜிக்மேன் விஜய், சமந்தா சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் மற்றும் காமெடி காட்சிகளின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் இன்று தொடங்கிவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது ஐரோப்பாவில் உள்ள மாசிடோனியாவில் விஜய், காஜல் அகர்வால் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லி இயக்கி வரும் இந்த படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், எஸ்.ஜே,சூர்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஆஸ்கார் வின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News